சோஷலிசக் கியூபா உங்களுடன் நாங்கள் – தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா
2016 ஆகஸ்ட் 13 அன்று மாலை 5 மணியளவில் சென்னை சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் வைத்து கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழுவின் தமிழ்நாடு NCSC தலைவர் திரைக்கலைஞர் ரோகினி தலைமையில் நடைபெற்றது.
இதில் சி.பி.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றிட, செயல் தலைவர் ஜி சுகுமாரன், பொருளியல் அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா, தோழர்கள் கே.பி பெருமாள், அமிர்தலிங்கம், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பேராசிரியர் சோனியா சுரபி குப்தா “தமிழில் கி.ரமேஷ் மொழிபெயர்த்த – கலை இலக்கியவாதிகளுக்கு… ஃபிடெல் காஸ்த்ரோ” புத்தகத்தை வெளியிட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக வாலண்டினா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் சந்துரு, மாநிலத் தலைவர் மிருதுளா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கியூபாவின் தூதர் யோவான் கார்லோஸ் மார்சன் அகுய்லேரா, ஆசிய இதழியல் கல்லூரி சசிகுமார், எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், NCSC செயலாளர் ஆறுமுகநயினார், பத்ரி, நாகராஜன் என பலர் பங்கேற்றனர்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Add comment