புதுச்சேரி லாஸ்பெட்டில் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதார வள மைய வளாகத்தில், பாரதி புத்தகாலயத்தின் 25-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “நம்ம ஊரு புத்தகத் திருவிழா” (Neighbourhood Book Fair) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) இனிதே தொடங்கியது. புதுச்சேரி புத்தக மையம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி செப்டம்பர் 7 வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
கல்வியாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் கு. அலெக்சாண்டர் வரவேற்புரை ஆற்றினார்.
மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு, புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.

மாண்புமிகு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. பெ. ராஜவேலு, மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. வி.பி. சிவக்கொழுந்து ஆகியோர் இணைந்து புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
மேனாள் அமைச்சர் க. லட்சுமி நாராயணன், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராசன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் தா. முருகன், சிபிஐ(எம்) ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் டி. அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாரதி புத்தகாலயத்தின் க. நாகராஜன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வை கோ. நடராஜன், க. ராதாகிருஷ்ணன், கி. விஜயமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Add comment