நம்ம ஊரு புத்தகத் திருவிழா என்ற தலைப்பில் “சேலம் புத்தகத் திருவிழா” வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா செப்டம்பர் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தலைமை வகிக்கிறார். சேலம் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் பெருமாள் முருகன் புத்தக விற்பனையை தொடங்கி வைக்கிறார். விழாவில் சேலம் வரலாற்றுச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்களின் நூல்கள் 50 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளது மேலும் ஆங்கில புத்தகங்கள் வெளிநாட்டு புத்தகங்கள் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது எனவும் போட்டித் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் நாவல்கள் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் புத்தகத் திருவிழாவில் இடம் பெற உள்ளது எனவும், குறிப்பாக 18 வயது வரை உள்ள அனைவருக்கும் 15 சதவீத தள்ளுபடி விலையிலும் பொதுமக்களுக்கு 10 சதம் விலை குறைப்பு இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர் மேலும் நாள்தோறும் மாலையில் குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் குறிப்பாக குழந்தைகள் கதை சொல்லல் நிகழ்ச்சி குழந்தைகளுக்கான ஓவிய போட்டி சிறப்பாக நடைபெறும் எனவும் விழா ஏற்பாட்டாளர் பாரதி புத்தகாலயம் பதிப்பீளர் க.நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சேலம் புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சுரேஷ், லால் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Add comment