மனச்சாட்சியின் குரல்கள்
நம்முடைய திட்டம்… சாமர்த்தியம்… விதிகள் இவற்றில் இருந்து விலகி விடுபடும்போது குழந்தைகளின் படைப்பாற்றல் கட்டுடைத்து மலர்வதைக் காண்கிறேன். ஜாடியில் கற்களைப் போட்டு காக்கா தண்ணீர் குடித்த கதையை விளக்குவதற்காகப் பேத்திக்குக் கூழாங்கற்கள் பொறுக்கிக் கொடுத்தோம்.
