About us

About us

பாரதி புத்தகாலயம் – ‘உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளை எனும் லாப நோக்கற்ற அமைப்பின் வெளியீட்டகம் ஆகும்.தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில், பாரதி புத்தகாலயம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் புத்தகக் காதலர்களுக்கு நெருக்கமான பெயராக உள்ளது. மக்கள் அறிவியல், இலக்கியம், இலக்கிய தத்துவங்கள், சமூக அறிவியல், தத்துவம் மற்றும் கவின் கலை உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கான புத்தகங்களை பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ரன் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்கான புனைவு இலக்கியங்கள், பாடல்கள், மக்களுக்கான அறிவியல், வரலாறு மற்றும் பல தலைப்புகளிலும், திட்டமிட்ட கல்விக்கான புத்தகங்களை வெளியிடுகிறோம்.

 

மேலும் பாரதி புத்தகாலயம் புதிய கோணம் (NEW ANGLE) என்ற பெயரில் சினிமா குறித்த புத்தகங்களை வெளியிடுகிறது.பாரதியின் புதிய கோணம் வெளியீடாக பெலா பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு (தமிழில் எம்.சிவக்குமார்) கிராபியன் பிளாக் எழுதிய மாற்று சினிமா, திரைப்படக் கல்லூரி ஆளுமைகள், அஜயன் பாலா எழுதிய உலக சினிமா வரலாறு, ரித்விக் காட்டக் எழுதியஇந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகைகள்‘ (தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி) மற்றும் சிவக்குமார் எழுதிய சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு வந்துள்ளன.

 

இந்தியன் யுனிவர்சிட்டி பிரஸ்  என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

 

பாரதி புத்தகாலயம் 30 கிளைகளுடன் உலகம் முழுவதும் சென்றடைகிறது. புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேலும் அதிகமானோருக்கு எடுத்துச் செல்கிறது. பாரதி புத்தகாலயத்தின், ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய விஞ்ஞான விக்ரமாதித்யன் கதை என்ற புனைவு 2013ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றது. இது உட்பட பல மதிப்புவாய்ந்த விருதுகளைப் பெற்றுள்ளது.


At Bharathi Puthakalayam, we try to address our customers’ requirements, demands and complaints as quickly as possible. We are also open to any suggestions and feedback that will improve your experience with us. So, please mail us for any queries, clarifications or complaints and we will attend to them at the earliest.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018