ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan)

எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் புத்தகத்திற்காக 2014-ஆம் ஆண்டில் பால சாகித்திய அகாதமி விருது பெற்றார்

எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர். இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா சிறுகதை இவருடைய இரா. நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் தனிநூலாகவும் கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் எழுத்தாளர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஆயிஷா இரா.நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் ‘புத்தகம் பேசுது’ மாத இதழின் ஆசிரியர்.

Showing 1–30 of 117 results

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018