எழுத்தாளர் ஜா.மாதவராஜ் (Ja.Mathavaraj) அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்லாது, தொழிற்சங்க செயற்பாட்டாளர், கவிஞர், ஓவியர், மேடை பேச்சாளர் என பன்முகத்திறமை படைத்தவர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செங்குழி என்கிற சிற்றூரில் ஜானகிராம் – தெய்வ ஜோதி தம்பதியினருக்கு 1.11.1961 அன்று மூன்றாவது குழந்தையாக பிறந்தார் ஜா.மாதவராஜ். வளர்ந்தது ஆறுமுகனேரி. வசிப்பது சாத்தூர். வார்த்தது தொழிற்சங்கம் என்கிறார் அவரது பாணியில்…
பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பின்னர் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனில் பொதுச்செயலாளராகவும், முன்ன்ணி பொறுப்பாளராகவும் 35 ஆண்டுகளாக செயல்பாடு.
இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
சேகுவேரா – சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில், இரண்டாம் இதயம், காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், என்றென்றும் மார்க்ஸ், மனிதர்கள் உலகங்கள் நாடுகள், க்ளிக், பொய் மனிதனின் கதை போன்ற Non fiction புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மேலும் எழுதிய புத்தகங்கள் அமேசானில் வெளிவந்திருக்கின்றன.
முதல் சிறுகதை இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது. க்ளிக் நாவலுக்கு 2023 ஆண்டுக்கான திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்றுள்ளார்.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
Showing all 6 results