- -5%

இதுவும் அதுவும் உதவும்
0Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.Ithuvum Athuvum Uthavum – இதுவும் அதுவும் உதவும்
சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து நாலு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டான் என்பது போன்ற சிரமமான வாக்கியங்களை இந்தியில் கற்றுக் கொள்வதால் கன்னையாலாலுக்குக் கொல்லைக்குப் போகுமே தவிர இவர்களுக்கு குறிப்பிட்ட பிரயோஜனம் இருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மும்பையில் வேலை கிடைத்துப் போனால்? போனால் என்ன? அங்கே பெட்டிக் கடையில் வாழைப்பழத்தைக் காட்டிக் கேட்டால் எடுத்துக் கொடுக்க மாட்டானா? என்னத்துக்கு கன்னையாவை இழுக்கணும்?
- -5%

எடின்பரோ குறிப்புகள்
0Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.Edinburgh Kuripppugal
எடின்பரோ – ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.
வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், ‘வெராந்தா’ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் ஷான் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய ஷான் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,
வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார்’. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. 
1975 – EMERGENCY DECLARED
0₹560.00போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது.



