- -10%

சமீராவுக்கு ஒரு மரம் வேண்டும்
0Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.(Sameeravuku Oru Maram Vendum)ஒரு நிமிடக் கதை என்றால் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவத்தைப் பற்றிய கதை என்பதல்ல. ஒரு நிமிடத்தில் படித்து முடித்துவிடக் கூடிய கதை. ஒரு நிமிடத்தில் என்ன கதை சொல்லிவிட முடியும்? பெரிய சவால்தான். ஓவியர்கள் ஒரு பெரிய பொட்டையும், முறுக்கு மீசையையும் மட்டும் வரைந்து பாரதியை நம் முன் நிறுத்துவார்கள். ஒரு வட்டக் கண்ணாடி, கைத்தடியில் காந்தித் தாத்தா கண் முன் வருவார். அது போலவே, வரத.இராஜமாணிக்கமும் குறைந்த சொற்களில், மூன்று நான்கு பத்திகளில் ஒரு கோட்டுச் சித்திரமாக ஒரு கதையை நம் கண் முன் நிகழ்த்திக் காட்டுகிறார்.

அதிதி
0₹190.00பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட அப்படித் தப்பி ஓடிவந்து ரயிலில் செட்டிநாட்டுக்காரரான நாகப்பனால் காப்பாற்றப்பட்டு பழனி வந்தவள்தான். நிறையப் பெண்கள் தப்பி ஓடுவதாக நாவலில் வருவது கவனத்தை ஈர்க்கிறது.


