எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் – தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் 1954ல் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்… என மாறி மாறி பணியாற்றியவர்.
அதன் பின்னர் 90களில் பொதுமக்களிடையே படிப்பறிவை, எழுத்தறிவை, கற்றலின் முக்கியத்துவத்தை பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலக பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர்.
1978ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு தலைவராக செயலாற்றி வருகிறார். தற்போது தனது இணையர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாய் அவர்களுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த் சென்னையில் தனது இணையர், மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார்.
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் “பாலகான சபா” என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஆளுமைகளுக்கே இசை கற்பித்த ஆசான். எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முக்கியமான படைப்புகள் வெயிலோடு போய் -1984-சிறுகதைகள், வாளின் தனிமை-1992- சிறுகதைகள், மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006, இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள், அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை, நான் பேச விரும்புகிறேன் – சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள், வீரசுதந்திரம் வேண்டி – (ஜா.மாதவராஜுடன் இணைந்து), பெண்மை என்றொரு கற்பிதம், பேசாத பேச்செல்லாம், இருவர் கண்ட ஒரே கனவு, சந்தித்தேன், வலையில் விழுந்த வார்த்தைகள், அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள், ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள், எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம் என சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரை தொகுப்புகள், இடதுசாரி முற்போக்கு அரசியல் ரீதியிலான பல நூல்களை எழுதியுள்ளார்.
வெளியான சிறு நூல்கள்
1. 1947
2. 1806
3. நமக்கான குடும்பம்
4. வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
5. அலைகொண்ட போது.. – சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்
6. தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
7. பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை
8. எது கலாச்சாரம்?
9. அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல் என தமிழ் வாசக உலகிற்கு அதி முக்கியமான படைப்புக்களை கொடுத்துள்ளார்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Sa.TamilSelvan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com
- -10%
ஒரு பண்பாட்டு அரசியல் பயணம்
1Original price was: ₹380.00.₹342.00Current price is: ₹342.00.ஆர். பாலகிருஷ்ணன் இவற்றையெல்லாம் ஏன் பேசுகிறார்? ஏன் இப்போது பேசுகிறார்? நாம் வாழும் காலத்தின் அசைவியக்கங்களுக்கான எதிர்வினையே இந்தப் பேச்சுகளும் எழுத்துகளும், இன்றைய வாழ்வை தன் கவிதையின் மூலம் கதைகளின் மூலம் ஓவியத்தின் மூலம் எதிர்கொள்ளும் ஒரு கலைஞனைப்போல. ஒரு படைப்பாளியாக சங்க இலக்கியம். திருக்குறள் என்கிற இரு அடித்தளங்களில் அழுத்தமாகக் காலூன்றி நின்று கருத்தியல் தளத்தில் போராடும் ஒரு பண்பாட்டு அரசியலை மிக நுட்பமாக முன்னெடுக்கிறார். கொந்தளித்து எழ வேண்டிய ஒரு காலச்சூழலில் மந்த நிலையில் அமிழ்ந்திருக்கும் குடிமைச் சமூகத்தின் முகத்தில் நீர் அடித்து எழுப்பும் முயற்சிகள் இவை.
- -10%
இடையிலாடும் ஊஞ்சல்
1Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.இந்து தமிழ் திசை மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட ஊஞ்சல் காலங்களுக்கு இடையிலும் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலுமென ஆடுகின்றது. சமூக அக்கறை மிக்க, அதே சமயம் சுவையான விவாதத்தைக் கிளப்பும் கட்டுரைகள் இவை.
- -10%
கேட்டதால் சொல்ல நேர்ந்தது
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது.
என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளியிலிருந்து யாரும் கேட்டுவிட முடியாது என்பதும் புலப்படுகிறது கேள்வி கேட்பவர். - -10%
பேசாத பேச்செல்லாம்
0Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.(pesatha pechellam )தோழர் ச தமிழ்ச்செல்வன் tamilselvan அ புனைவு எழுத்துகளில் இக்கட்டுரைகள் தனித்த முத்திரை பதித்தவை. தனிப்பட்ட வாழ்வனுபவங்களை திறந்த மனதோடும் ஒருவித நெகிழ்ச்சியான தொனியிலும் எழுதியிருக்கிறார்.
1806 வேலூர் புரட்சி
0₹15.00காரிருள் சூழ்ந்த கரிய வனத்தில் ஓர் ஒளிமின்னலாக 1806இல் எட்டு மணிநேரம் தோன்றி மறைந்த இக்கிணர்ச்சி நாடெங்கும் இந்திய சிப்பாய்களின் மனதில் வரும் வரும் காலமெல்லாம் தொடர்ந்து மின்னிக்கொண்டே இருந்தது.
- -10%
றெக்கைகள் விரியும் காலம்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட முடியாது.
இந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை
0₹80.00India Sudhandhira Varalaru Oru Parvai
இன்று வாழும் சிறுவர்கள் சுதந்திரத்திற்குப் பின் பிறந்த நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றை, அந்த வரலாற்றின் முக்கிய நாயகர்களை அறிமுகப்படுத்துவதே இந்நூல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய ஜான்சி ராணியிலிருந்து துவங்கி மகாத்மா காந்தி, பகத்சிங், ஆசாத், எல்லை காந்தி என ஏராளமானவர்களின் பங்கை, இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றை சித்திர வடிவில் முன்வைக்கிறது இந்நூல்.
- -10%
இருளும் ஒளியும்
0Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.இத்தனாந்தேதியோடு அறிவொளி இயக்கம் முடிஞ்சு போச்சு. போயிட்டு வாரோம் என்று நாங்கள் மக்களிடம் விடைபெற்றுப் பிரியவில்லை.
போனவாரம் கூட தென்காசிக்குப் போய்விட்டு பஸ்ஸில் திரும்பும்போது கொய்யாப்பழம் விற்ற பெண்மணி என்னிடம் ரெண்டு பழத்தை நீட்டியபோது நான் வேண்டாம் என்று மறுத்தேன். காசெல்லாம் வேண்டாம் சார். சும்மா சாப்பிடுங்க. நீங்க அறிவொளி சார்தானே? எங்க ஊருக்கு சசிகலா மேடம் கூட வந்து கதையெல்லாம் சொன்னீங்கள்ள? நானும் அறிவொளிதான். தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்
0₹15.001940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு.