எழுத்தாளர் உதயசங்கர் (Udhayasankar) சொந்த ஊர் கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை, ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இதுவரை எட்டு சிறுகதை நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கவிதை நூல்கள், ஒரு சிறார் பாடல்கள் நூல், மூன்று சிறார் கதைகள் நூல்கள், ஒரு சிறார் நாவல், மலையாளத்திலிருந்து பதினைந்து நூல்கள், ஆங்கிலத்திலிருந்து ஒரு நூல், மூன்று கட்டுரை நூல்கள், மலையாளத்திலிருந்து குழந்தைகளுக்கான படக்கதை நூல்கள் நாற்பது, ஒரு மருத்துவ நூல், ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது. மேலும் தமிழ் இலக்கிய விமரிசகர் க.நா.சு., கரிசல் இலக்கியப்பிதாமகர் கி.ராஜநாராயணன், ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர். உலகப்பண்பாட்டு மையத்தின் விருதையும், திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் படைப்பூக்க விருதினையும் பெற்றவர்.
உதயசங்கர் (Udhayasankar) பிறிதொரு மரணம் சிறுகதை நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுமைப்பித்தன் நினைவு விருதினைப் பெற்றவர். மாயக்கண்ணாடி சிறார் கதைகள் நூலுக்கு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதினையும், சிறந்த சிறார் இலக்கியத்துக்கான விகடன் விருதினையும் பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலசெயற்குழு உறுப்பினர்.