எழுத்தாளர் வீ.பா.கணேசன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer V.Ba.Ganesan Books in Tamil at Low Price - www.thamizhbooks.com

எழுத்தாளர் வீ.பா.கணேசன் (V.Ba.Ganesan) தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். இடதுசாரி முற்போக்கு புத்தகங்களை வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துள்ளார். இதில் சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இந்து மதமும் இந்துத்துவாவும், சாவி, தங்கக் கோட்டை, வங்கப்புலி மர்மம், நெப்போலியனின் கடிதம், பிள்ளையாருக்குப் பின்னே மர்மம், காத்மாண்டு கொள்ளையர்கள், இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம், டார்ஜீலிங்கில் ஓர் அபாயம், மர்மமான ஒரு குடித்தனக்காரர், மகாராஜாவின் மோதிரம் ஆகிய இவரது புத்தகங்கள் அனைத்தும் தமிழத்தில் மிக பிரபலமான படைப்புகள் ஆகும்.

இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் வீ.பா.கணேசன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer V.Ba.Ganesan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com