எழுத்தாளர் வீ.பா.கணேசன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer V.Ba.Ganesan Books in Tamil at Low Price - www.thamizhbooks.com

எழுத்தாளர் வீ.பா.கணேசன் (V.Ba.Ganesan) தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். இடதுசாரி முற்போக்கு புத்தகங்களை வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துள்ளார். இதில் சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இந்து மதமும் இந்துத்துவாவும், சாவி, தங்கக் கோட்டை, வங்கப்புலி மர்மம், நெப்போலியனின் கடிதம், பிள்ளையாருக்குப் பின்னே மர்மம், காத்மாண்டு கொள்ளையர்கள், இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம், டார்ஜீலிங்கில் ஓர் அபாயம், மர்மமான ஒரு குடித்தனக்காரர், மகாராஜாவின் மோதிரம் ஆகிய இவரது புத்தகங்கள் அனைத்தும் தமிழத்தில் மிக பிரபலமான படைப்புகள் ஆகும்.

இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் வீ.பா.கணேசன் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer V.Ba.Ganesan Books in Tamil at Low Price – www.thamizhbooks.com

  • Manitha Uyirgala Sothudaimaiya - thamizhbooks.com

    மனித உயிர்களா? சொத்துடைமையா?

    0

    Manitha Uyirgala Sothudaimaiya – மனித உயிர்களா? சொத்துடைமையா?
    இந்த நூலில் இடம்பெற்றுள்ள பி.ராமமூர்த்தியின் நாடாளுமன்ற-சட்டமன்ற உரைகளைப் படிக்கும்போது, அவருடைய ஆழமான அறிவையும், தொலைநோக்கு சிந்தனையையும் ஒவ்வொரு உரையும் தயாரிப்பதற்கு அவர் செலுத்தியுள்ள மகத்தான உழைப்பையும் காண முடிகிறது.

    250.00
    Add to cart
  • -11% India @75

    இந்தியா @ 75

    0

    இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் அளித்த கருணை மனுக்கள் பற்றியும், அவற்றின் விளைவாக அந்தமான் செல்லுலர் சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும் நாம் விவாதித்திருக்கிறோம்.

    Original price was: ₹190.00.Current price is: ₹170.00.
    Add to cart
  • Hindu Madhamum Hinduthuvavum

    இந்து மதமும் இந்துத்துவாவும்

    0

    ’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது

    25.00
    Add to cart
  • -50% India Communisa Iyakkam Oru Noorandu Payanam

    இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம்

    0

    ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த ஒட்டு மொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர்.

    Original price was: ₹420.00.Current price is: ₹210.00.
    Add to cart
  • -19% satyajit Raj Vazhvum Vazhiyum

    சத்யஜித் ரே

    0

    இந்திய சினிமாவின் வரலாறு சத்யஜித் ரேயிலிருந்தே துவங்குகிறது

    Original price was: ₹160.00.Current price is: ₹130.00.
    Add to cart
  • -10% பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்-0

    பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்

    0

    மரண தண்டனையை எதிர்நோக்கிய பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் கியோர்கி டிமிட்ரொவ் பாசிஸ்ட் அரசின் சதியை நீதிமன்றத்தில் துல்லியமாக அம்பலப்படுத்திய உலகப் புகழ்பெற்ற வழக்கின் விவரங்களே இந்நூல்.

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • -10% மகாராஜாவின் மோதிரம்-0

    மகாராஜாவின் மோதிரம்

    0

    “புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும் அறிய நேர்ந்தது.”

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்-0

    கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்

    0

    கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.

    30.00
    Add to cart
  • -10% கேங்டாக்கில் வந்த கஷ்டம்-0

    கேங்டாக்கில் வந்த கஷ்டம்

    0

    சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வ-ழக்கை கொண்டு வந்து சேர்த்தது.ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா?அல்லது கொலையா?முகமூடிகளும்,புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% தங்கக் கோட்டை-0

    தங்கக் கோட்டை

    0

    முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக,அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல்.ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்?அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% கல்கா மெயிலில் நடத்த சம்பவம் -0

    கல்கா மெயிலில் நடத்த சம்பவம்

    0

    “ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு!”

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% கைலாஷில் ஒரு கொலையாளி-0

    கைலாஷில் ஒரு கொலையாளி

    0

    புவனேஸ்வர் ராஜா–ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது.பின் தொடர்கிறார் ஃபெலுடா.அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது.இந்திய கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில் ஒரு கொலையாளி.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% வங்கப்புலி மர்மம்-0

    வங்கப்புலி மர்மம்

    0

    “காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான் வங்கப் புலி மர்மம். “

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • பூட்டிய பணப்பெட்டி-0

    பூட்டிய பணப்பெட்டி

    0

    வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா.

    60.00
    Add to cart
  • -10% பம்பாய் கொள்ளையர்கள்-0

    பம்பாய் கொள்ளையர்கள்

    0

    ‘ஜடாயு’வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை.அப்பாவி’ஜடாயு’விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள்.கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெற போராடினார்.கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?என்பதைச் சொல்கிறது பம்பாய் கொள்ளையர்கள். “

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% பிணம் நடந்த மர்மம்-0

    பிணம் நடந்த மர்மம்

    0

    குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% கல்லறை ரகசியம்-0

    கல்லறை ரகசியம்

    0

    “கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கே!”என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% தேவியின் சாபம்-0

    தேவியின் சாபம்

    0

    மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா?புலி மீண்டும் வந்ததா?என்பதைச் சொல்கிறது தேவியின் சாபம்.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% நெப்போலியனின் கடிதம்-0

    நெப்போலியனின் கடிதம்

    0

    ‘பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது’என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடையோடு கிளியும் கிடைத்ததா என்பதைச் சொல்கிறது’நெப்போலியனின் கடிதம்.’

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% மரண வீடு-0

    மரண வீடு

    0

    ஆசை,பேராசை,நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.அவரையும் முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதைச் சொல்கிறது மரண வீடு

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்-0

    பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்

    0

    காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது.விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார்சிலை காணாமல் போனது.துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன்,போலி சாமியார்,சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப் போராடி ஃபெலுடா வெற்றி பெற்றதைச் சொல்வதுதான்’பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்’இக்கதையை பின்னாளில் ஜெய்பாபா ஃபெலுநாத் என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார் சத்யஜித்ரே.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% மர்மமான ஒரு குடித்தனக்காரர்-0

    மர்மமான ஒரு குடித்தனக்காரர்

    0

    உயிர்ம வேதியல் பரிசோதனை கூடத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிர் பிழைத்து,பார்வையிழந்து நிற்கும் விஞ்ஞானி நிஹார் தத்தாவின் ஆராய்ச்சி குறிப்புகளுக்கு குறி வைப்பது யார்?வெறும் திருட்டு பயத்தை அகற்றப் போன ஃபெலுடா அங்கே ஒரு கொலை சம்பவத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது.கொலைக்கான காரணம் அறிந்தும் அதை ஃபெலுடா விளக்காமல் ஒதுக்கியதன் பின்னே இருந்த மர்மம் என்ன என்பதை விளக்குகிறது’மர்மமான ஒரு குடித்தனக்காரர்’

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% காத்மாண்டு கொள்ளையர்கள்-0

    காத்மாண்டு கொள்ளையர்கள்

    0

    ஒரே மாதிரியான இரண்டு’பக்ரா’க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது.அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார்.கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா.அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட-கடத்தல்-கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள்.அவர் ஏற்கெனவே சந்தித்து வீழ்த்திய’வலுவான’எதிரியை மீண்டும் சந்தித்துப் போராடியதைச் சொல்கிறது’காத்மாண்டு கொள்ளையர்கள்.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart