சிறார் எழுத்தாளர் விழியன் (Vizhiyan @ Umanath Selvan) உமாநாத் செல்வன் என்னும் இயற்பெயரை உடைய விழியன், அக்டோபர் 30, 1980 அன்று, வேலூரை அடுத்த ஆரணியில், செந்தமிழ்ச் செல்வன் – குணசுந்தரி இணையருக்குப் பிறந்தார். வேலூரில் உள்ள டவுன்ஷிப் ஆங்கிலப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். வேலூர் வாணி வித்யாலயா பள்ளியில் மேல்நிலைக் கல்வி படித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (VIT University, Vellore) மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பி.ஈ பட்டம் பெற்றார். வேலூர் என்ஜினியரிங் கல்லூரியில் (Vellore Engineering College) எம்.ஈ பட்டம் பெற்றார்.
விழியன் குழந்தைகளுக்கும். சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய ‘மாகடிகாரம்’. ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘கிச்சா-பச்சா’ ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார்.
விழியன், பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றினார். தற்போது சென்னையில் மென்பொருள் துறை வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பள்ளிக் கல்விக்கான துணைக் குழுவில் உறுப்பினர்.
சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
விழியன் அவர்கள் பெற்ற விருதுகள்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருது – அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை நூலுக்காக.
ஆனந்த விகடன் இதழின் 2013-ம் ஆண்டின் சிறந்த சிறார் நூல் தேர்வு- மாகடிகாரம்
சேஷன் சம்மான் விருது – 2015.
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் வழங்கிய அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – மலைப்பூ சிறார் நாவல் (2022)
சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது
நியூஸ்7 தொலைக்காட்சியின் யுவ ரத்னா விருது
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவர் விருது
சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
1Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.