எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer Yuma Vasuki Books in Tamil at Low Price - www.thamizhbooks.com

எழுத்தாளர் யூமா வாசுகி (Writer Yuma Vasuki) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுகொட்டையை பூர்விகமாக கொண்டவர். கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர் என பல படைப்பு தளங்களில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயன் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

யூமா வாசுகி `தோழமை இருள்’, `இரவுகளின் நிழற்படம்’, `அமுத பருவம்’, `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்’ எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு’, `மஞ்சள் வெயில்’ ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார். தனக்கே உரித்தான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் எழுதிய “ரத்த உறவு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர். ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்(Dhanviyin Piranthanaal) நூலுக்காக 2024 ஆம் ஆண்டு பாலசாகித்ய புரஸ்கார்க்கும் (Bal Sahitya Puraskar) தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer Yuma Vasuki Books in Tamil at Low Price – www.thamizhbooks.com