அறியப்படாத தமிழகம்
0₹90.00நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
- -5%
திருடன் மணியன்பிள்ளை
0Original price was: ₹690.00.₹655.00Current price is: ₹655.00.செய்யாத குற்றத்திற்க்காகச் சிறைத்தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள்பிரமிக்க வைப்பவை.ஒருபுறம் மனிதத்தன்மைய்ற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும்.
வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்
0₹250.00வீரப்பன் & கோவுக்குக் காடு, வனவிலங்குகள், பறவைகள் பற்றிப் பாடம் நிகழ்த்திய கிருபாகர் – சேனானியால் எழுதப்பட்ட இந்நூல் நாம் அறியாத வீரப்பனை நமக்குக் காட்டுகிறது.
பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்
0இப்புத்தகத்தில் இடம்பெறும் பெரும்பாலான பகுப்பாய்வுகள் “பேரியல்” அணுகுமுறையைச் சார்ந்தவையே என்றாலும், அவ்வப்போது “இடையியல்’, ‘நுண்ணியல்” அணுகுமுறைகளையும் பயன்படுத்துவோம்.
வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா
0₹140.00கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம்.
வைக்கம் போராட்டம்
0₹390.00வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவரான பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார்.
விடியலைத் தேடிய விமானம்
0₹125.00விமானிகளின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்நாவலில், ‘வினையாற்றுதல்’ குறித்த விவாதங்களும் விழுமியங்களும் முன்னிலைப்படுகின்றன. அதுவே இந்நாவலின் சிறப்பாகும்.
வேலூர்ப் புரட்சி 1806
0₹325.001806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி. வேலூர்க் கோட்டை. ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது.
அடிமை ஆவணங்கள்
0₹160.00தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல்.
- -6%
நவசெவ்வியல் பொருளியல்
0Original price was: ₹425.00.₹400.00Current price is: ₹400.00.“ஏன் எதற்கு, எப்படி என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக் கட்டமைத்துள்ளது. இவ்வினாக்களுக்கு ஒற்றைப் பதில் இருந்தால் அப்புலம் தேங்கிவிடும்.
பேட்டை
0₹390.00சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. -அரவிந்தன்