தாய் மண்
0₹385.00இந்தியாவைத் தனது தாய்மண்ணாக வரித்துக் கொண்ட சபிலாலின் வாழ்க்கை நிகழ்வுகளுடன், இந்தியாவில் வேரூன்றி விட்டபோதிலும் தமது தனித் தன்மையை விட்டு விடாத நேபாளியர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலானவற்றையும் விவரிக்கும் இந்த நூல் 2016ஆம் ஆண்டின் சிறந்த நேபாளி மொழிப் படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
Water lilies and war drums
0₹340.00The work aims to open a window to ancient Tamil literature.
If the Non-Tamil readers try to walk a step or two in the corridors of Sangam poetry, the aim of the book will be fulfilled.யாரும் இன்னொருவர் இல்லை
0₹250.00பூக்களின் மேல் படிந்துள்ள பனித்துளிகளைப் பற்றி அடிக்கடி யோசிக்கிறேன் நான்
கிரணங்களின் ஒளித்துகள்களை ஏந்தி பூக்களின் மேலிருக்கும் ஒளிமயமான இந்த பிரபஞ்சத்தின் சிக்கலான ஜாதகத்தை எந்த ஜோதிடன் எழுதிவைத்தான்.
பின் ஏன் திடீரென்று இந்த எழிலின் பூரணத்தைக் கலைத்துப் போடுகிறான்? ஒன்றிலிருந்து பூஜ்யம் வரையிலான யாருடைய இந்த வடிவியல் பித்து வியப்படையச் செய்கிறது?
இந்திய இலக்கியச் சிற்பிகள்
0₹50.00’இந்தப் புத்தகம் முழுவதும் லா.ச. ராவையும் அவர் எழுத்தையும், எழுத்தின் நோக்கத்தையும் நோக்கத்தின் பவித்திரத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சித்திருப்பதாக நம்புகிறேன்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்
0₹50.00தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எல். ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி, பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர்.
நா. வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
0₹315.00நா. வானமாமலை (1917 – 1980)
தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளார் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர். அவரின் நூற்றாண்டு நிறைவில் அவர் குறித்து வெளிவரும் தொகுப்பு நூல் இது.
இளையவர்களின் புதுக்கவிதைகள் – முன்னுரையும் தொகுப்பும்
0₹175.00தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது.
பீலர்களின் பாரதம்
0₹270.00“பீலர்களின் பாரதம்” என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது.
- -5%
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
0Original price was: ₹280.00.₹265.00Current price is: ₹265.00.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார். கட்டுரை. இயக்கியத்திலும் கதைப் படைப்பிலும் அவர் மிக வியப்பூட்டும் சாதனைகளைப் புரிந்திருப்பது பெரும்பாலானவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாரதியாரின் உயிரோட்டமிக்க நடை அழகு, பெண் விடுதலை ஆர்வம், கலை ஞானம், வரலாற்றும் பதிவுகள் ஆகியன சிறந்த முறையில் வெளிப்படுமாறு ஜெய்காந்தன். சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய இரு பெரும் படைப்பாளிகள் இக்கட்டுரைகளைத் தேர்ந்து தொகுத்துள்ளனர்.
சா. சோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
0₹195.00சாகண்டி சோமயாஜூலு : சா.சோ. அவர்களின் கதைகள் வழியாக அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த கடைநிலை மக்களின் உலகத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்.