- -5%
கடலோடி
0Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.Kadalodi – கடலோடி
நரசய்யா 1950களில் கப்பற்படையில் பொறியாளராகச் சேர்கிறார். அதற்கான நேர்காணல் நடக்கிறபோது, “கப்பலைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவரிடம் ஆங்கில அதிகாரிகள் கேட்கிறார்கள். “கப்பலைப் படத்தில் பார்த்திருக்கிறேன்” என்கிறார். திரையில் பார்த்ததுதான் இவருக்கும் கப்பலுக்குமான முதல் அறிமுகம். போர்க்கப்பல் என்பதால் அதற்கான பயிற்சிக் கூடத்தில் சேர்வதில் இருந்து நமக்கான வாசிப்பு தொடங்குகிறது. அந்தப் பயிற்சிக் கூடத்தில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கம், ஊரைத் தேடுவது, எனத் தொடங்குகிறார். முதன்முதலாக பெரிய கப்பலைப் பார்க்கும்போது கொண்ட பிரமிப்பு, கடல் கொந்தளிப்பில் ஏற்படுகிற மன, உடல் கொந்தளிப்புகள் என ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே போகிறார்.