
இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா
0₹80.00Israeliya Hindutva Cinema – இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா
பாலஸ்தீன மக்களின் அரசியல், வரலாறு, அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்ரேல் செலுத்தும் அதிகாரம் மற்றும் அது தொடுக்கும் போர்களின் பாதிப்புகள் பற்றிப் பல பாலஸ்தீனத் திரைப்படங்கள் சிறப்பாகப் பேசுகின்றன.
அதே வேளையில், இஸ்ரேலுக்குள்ளும் உலக அரங்கிலும் கடந்த 100 ஆண்டுகளாகப் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திவரும் இஸ்ரேலியத் தயாரிப்புத் திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. தங்களுக்கு மிக அருகிலேயே பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போதும், அதனைக் கொண்டாடும் மனநிலையைப் பெரும்பாலான இஸ்ரேலிய யூதர்கள் பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். இதே பாணியில் இந்தியாவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரத் திரைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
திரைப்படங்கள் மூலமாக வரலாறு நெடுகிலும் எப்படியெல்லாம் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஆய்வுசெய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூல் இது. வெறுப்பின் கொற்றத்தை வீழ்த்துவோம்…
திருப்பரங்குன்றம் – முழு வரலாற்று ஆய்வு
0₹200.00Thiruparangkundram Muzhu Varalattru Aaivu – திருப்பரங்குன்றம் – முழு வரலாற்று ஆய்வு
மதுரையில் ஆரம்பக்கலவியைப் படிக்கத் தொடங்கியது முதல், பட்டப்படிப்பை பாளையங்கோட்டையில் படிக்கச் சென்றது வரை, இளமைப் பருவம் முழுவதும் பரங்குன்றம் மலையைக் கடந்தே சென்றுள்ளேன். அதைப் பார்க்கும் போநெல்லாம் மலைக்க வைக்கும், மலைக்க வைக்கும் பலவற்றைத் தன்னுள் கொண்டுள்ளதால் மலை என்றார்களோ?
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கியது. உலகம் நோன்றிய நாள் முதல் எல்லாவற்றையும் பார்த்த அம்மலையை வைத்து சிறுமைத்தனமான காரியங்கள் நடக்கிறது. மலையும். அம்மலையினடியில் வாழும் மக்களின் வரலாறு நான் என்ன? கோடிக்கணக்கான ஆண்டுகள் முதல் இந்நாள் வரை அங்கு என்ன நடந்தது என்பதன், நிலவியல், வரலாறு, அரசியல் பார்வையே இந்நூல்.
எனது பர்மா வழிநடைப் பயணம்
0₹250.00Enathu Burma Vazhi Nadaipayanam – எனது பர்மா வழிநடைப் பயணம்
வெ. சாமிநாத சர்மா எழுதிய புகழ்பெற்ற நுல். இது பயண இலக்கியம். தன் வரலாறு, சமகால வரலாறு என்று குறிக்கத்தக்க ஒரு நூல். இது இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாவை ஜப்பான் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்துவந்த வெ. சாமிநாத சர்மா அகதியாக பல இன்னல்களுக்கு ஆளாகி கால்நடையாகவும். வாகனங்கள் வழியாகவும் சென்னை வந்து சேர்ந்தார். அவர் இந்த நூலில் பர்மாவின் ரங்கூனில் இருந்து புறப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது முதல் அதன்பிறகு 1942 பிப்ரவரியில் பயணத்தைத் தொடங்கி பலவகையில் பயணம்செய்து 1942 மே 14 அன்று சென்னை வந்து சேர்ந்ததுவரையிலான நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளார்.


தொழிலாளர்கள் மீது போர் தொடுக்கும் பாஜக
0₹50.00Thozhilalarkal Meedhu Por Thodukkum BJP – தொழிலாளர்கள் மீது போர் தொடுக்கும் பாஜக
முக்கியமான 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுகிறோம் என்ற பெயரில் பல உரிமைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் நீக்கிவிட்டு பல மோசமான பிரிவுகளைச் சேர்த்துள்ளது பாஜக அரசு. தொழிற்சங்க செயல்பாட்டை முடக்குவதற்கான ஏற்பாடுகளும் அடங்கியுள்ளன. வாரத்திற்கு 70 மணி நேரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென பல முதலாளிகள் பேசுகிற அளவிற்கு துணிவு பெற்று விட்டனர். கோவை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் மு.ஆனந்தன் தொழிலாளர் வர்க்க உணர்வோடு இந்தச் சட்டத் தொகுப்புகளின் மோசமான அம்சங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்த நூல் மிகவும் பயனுள்ள ஆயுதமாக இருக்கும்.
- -10%

ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.Oru Communistin Ninaivu Kurippukal – ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்
மக்களுக்காக உழைக்கும் லட்சியப்பிடிப்போடு தோழர் ராமச்சந்திரன் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றார். புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக உயர்ந்து நிற்கும் தோழர் பி.ஆர்.சி எப்பொழுதுமே கட்சி நலனை முன்னிறுத்தி வருபவர்.
- -11%

வரிசையைக் கலைத்துப்போட்டவன்
0Original price was: ₹180.00.₹160.00Current price is: ₹160.00.Varisaiyai Kalaithupottavan – வரிசையைக் கலைத்துப்போட்டவன்
நெல்லையின் முகவரியாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன். நெல்லையின் வரலாற்றுப் பெருமைகளை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்க செயல்பாட்டாளர், சமூகச் செயற்பாட்டாளர், சிறந்த அமைப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட நாறும்பூநாதனைப் பற்றி அவருடைய நண்பர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், இடதுசாரிக்கட்சித் தலைவர்கள், எழுதிய நினைவலைகளின் தொகுப்பு நூல். இந்த நூலை வாசிக்கும்போது நாறும்பூநாதன் வாழும்போதும் மறைந்த பிறகும் நமக்குச் சொன்ன செய்திகளை அறிந்துகொள்ள முடியும். பின்பற்றவும் முடியும்.
- -12%

ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956
0Original price was: ₹250.00.₹220.00Current price is: ₹220.00.Oru Varalattru Pathivu P Ramamoorthy Sattamandra Peruraikal 1954 – 1956 – ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956
ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் நாட்டு விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்ட தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் 1954-56 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், மொழிக்கொள்கை, சேலம் உருக்காலை, கைத்தறி நெருக்கடி, கல்விச் சீர்திருத்தம் போன்றவற்றின் மீது ஆற்றிய காத்திரமான உரைகளின் தொகுப்பாக இத்தொகுதி அமைகிறது.
- -12%

முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்
0Original price was: ₹130.00.₹115.00Current price is: ₹115.00.Muthalalithuvathal Maraikapatta Varalattru Nigazhvukal – முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்
கப்பற்படை எழுச்சிக்குக் கம்யூனிஸ்டுகள் அளித்த ஆதரவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தொழிலாளி வர்க்கம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆதரவினைத் தெரிவிக்கவும் கட்சி வழிகாட்டியது. காங்கிரசும், லீகும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியிலும் மக்களின் ஆதரவு மகத்தானதாக இருந்தது. அதேபோல் சுரண்டல் ஒழிப்பு, தொழிற்சங்க உரிமை, தொழிலாலர் உரிமைக்காக கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடந்த முத்திரை பதித்த போராட்டங்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன.
- -10%

நித்ய சுமங்கலிகள் உள்ளும் புறமும்
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.Nithiya Sumangaligal Ullum Puramum – நித்ய சுமங்கலிகள் உள்ளும் புறமும்
‘நித்ய சுமங்கலிகள் உள்ளும் புறமும்’ என்ற இந்நூல், எங்கள் வரலாற்றில் ஒரு கோஹினூர் வைரம். இந்நூலை வாசிப்பவர்களில் சில ஆயிரம் பேராவது எங்கள் சமூகம் குறித்து தங்கள் மனதில் பதிந்திருந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன். - -10%

மேற்கு தொடர்ச்சி மலை
0Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.Maerku Thodarchi Malai – மேற்கு தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைகள் 100 கேள்விகளும் விடைகளும் லட்சத்திற்கும் மேலான தகவல்களையும் தருவதாக அமைந்திருப்பதோடு போட்டித் தேர்வு எழுதும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமெனில் அதன் உள்ளடக்கத்தை தெரிந்து, உணர்ந்து கொண்டால்தான் அதனை பாதுகாப்பது பற்றிய அறிவு நமக்கு வரும். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள உதவும் இந்நூல்.
- -10%

பறங்கிப் பூ பூப்பதைப் பார்க்க நேரமில்லை
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.Paranki Poo Pooppathai parka Neramillai – பறங்கிப் பூ பூப்பதைப் பார்க்க நேரமில்லை
நியாயங்கள்
குவிந்து கிடக்கிற
உபரிகளிலிருந்து
நீ
பிரம்மாண்டங்களை
நோக்கி நகர்கிறாய்
இரைந்து கிடக்கிற
உதிரிகளிலிருந்து
நான்
ஒரு கவளம் தயாரிக்கப் போராடுகிறேன்
இருவேறு உலகத்தியற்கை என்றவன்
உனக்குத் தோதானவனாகிறான்
உலகத் தொழிலாளர்களை
ஒன்றிணைக்க அறைகூவலிட்டவன்
என் நேசத்திற்குரியவனாகிறான். - -13%

அம்பேத்கருடன் டீ சாப்பிடுவோம்
0Original price was: ₹120.00.₹105.00Current price is: ₹105.00.Ambedkarudan Tea Sapiduvom – அம்பேத்கருடன் டீ சாப்பிடுவோம்
களப்பிரன் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘அம்பேத்கருடன் டீ சாப்பிடுவோம்’ என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது. களப்பிரன் தேர்ந்த எழுத்தாளர். ஆற்றல் மிக்கப் பேச்சாளர். பன்முகத் திறன் கொண்ட களச் செயல்பாட்டாளர். இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டிருந்தாலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயக மாண்புகள் போன்றவை இதன் அடிநாதமாக உள்ளது. அம்பேத்கருடன் சேர்ந்து சாப்பிடும் டீ புராணக் கதைகளின் அமிழ்தமாக இருக்காது.சமத்துவ சுவை நிறைந்ததாக இருக்கும்.
- -11%

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு
1Original price was: ₹180.00.₹160.00Current price is: ₹160.00.Manadugalin Vazhiye Magaththana Varalaru – மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு
இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவியது எது என்றால், தேசிய முதலாளிகளின் தலைமையிலான இந்திய தேசிய இயக்கத்திற்கும் அதில் பங்கேற்ற தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான உறவுதான். - -10%

இந்திய வரலாறு தொகுதி 1
0Original price was: ₹430.00.₹387.00Current price is: ₹387.00.India Varalaru – இந்திய வரலாறு தொகுதி 1
துவக்க காலங்களில் இருந்து, பிரிட்டிஷ் ஆட்சி, தேசிய இயக்கம், தேச விடுதலை வரையிலான இந்திய வரலாற்றின் முக்கியமான சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார மாற்றங்களின் வியப்பூட்டும் வரலாற்றை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. 

கோழைத்தனம்
0₹25.00Kozhaithanam – கோழைத்தனம்
மெத்தப் படித்த ஒரு பெண்கூட இவ்வட்டாரத்தில், தான் விரும்பிய வண்ணம் சுதந்திரமாக வாழ்ந்துவிட முடியாது என்பதன் ரத்த சாட்சியாக ரிதன்யாவின் வாழ்வு அமைந்து விட்டது. அத்தகைய பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்ள அருள்மொழியின் ‘கோழைத்தனம்’ கதை நமக்கு உதவும்.
சுதந்திர தினம் சிறப்புச் சலுகை
0₹1,445.00independence day – சுதந்திர தினம் சிறப்புச் சலுகை
1. இறுதி நாயகர்கள்
2.1946 இறுதி சுதந்திரப் போர் கப்பற்படை எழுச்சியின் கதை
3. விடுதலைப் போராட்டம் 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்
4. விடுதலைத் தழும்புகள்
5. 1806 வேலூர் புரட்சி
6. இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்
ஃபிடல் காஸ்ட்ரோ
0₹30.00Fidel Castro – ஃபிடல் காஸ்ட்ரோ
ஒரு சின்னஞ்சிறு பிரசுரத்தில் ஃபிடெல் காஸ்ட்ரோ என்கின்ற மகத்தான உலக நாயகனின் உயிர்ச் சித்திரத்தை வரைந்து காட்டிவிட முடியுமா என்கிற சந்தேகத்துடனே இச்சிறுநூலை வாசிக்கத் துவங்கினேன்.
பேராற்றலின் குரல்
0₹30.00Perattralin Kural – பேராற்றலின் குரல்
மக்களிடையே, தெருக்களில் பேசும்போது எல்லாமே மாறிப் போகும். உண்மையான நேசத்தின் போலியற்ற தன்மையையும், உணர்ச்சிகளையும் அந்த உரையாடல் வெளிக்கொணரும். அவருடைய பல்வேறு பெயர்களில் நிலைத்தது “ஃபிடெல்” என்பதுதான்.




























