- -5%
தமிழில் தலித்தியம்
0Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.Thamizhil Dalitiyam (தமிழில் தலித்தியம்)
மேற்குறித்த சமூக நிகழ்வுகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால முன்னெடுப்பே தலித்தியம். நவீன அரசியல் கருத்துநிலைகளை உள்வாங்கி இன்றைய தலித்தியம் செயல்படுகிறது. இதனைக் குறித்த பதிவாகவே சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள இந்த நூல் அமைகிறது. பின்காலனிய நவீன சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணமாகவும் இந்நூல் இருக்கும்.
- -5%
தமிழும் இஸ்லாமும்
0Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.இந்தியா ஒரு நந்தனம் – இங்கு
எல்லா வண்ணப் பறவைக்கும் கூடுண்டு
இப்படி வேறெந்த நாடுண்டு?
புள்ளிகளைக் கோலமாக்கிடப்
புரிதல் என்ற கோடுண்டு
குருதியில் கூடப் பிரிவுண்டு- என்னை
கொடுக்கும் தாய்ப்பாலில்
என்ன வேறுபாடுண்டு?
வெட்டியான்கள் காட்டை
விறகாக மட்டுமே பார்ப்பதுண்டு
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களால்-விடியல்
சிதறிற்றும் இல்லை
என்பதை யாரிங்கே மறுப்பதுண்டு? - -5%
மேல் கணக்கு
0Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.சங்கத் தமிழ்ப் பாடல்கள் குறித்தும், உரையாசிரியர்களின் சில தவறான புரிதல்கள் குறித்தும், சங்கப் பாடல்களில் இடம்பெறும் நுட்பங்கள் குறித்தும் தனது விரிவான பார்வையை, ’மேல்கணக்கு’ நூல் வழியாகக் கடத்தியிருக்கிறார் கவிஞர் யுகபாரதி. தொல்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியைத் தற்காலக் கவிதைகள், கதைகள், திரைப்பாடல்களுடன் இணைத்துப் பார்த்திருக்கிறார். சங்க இலக்கியங்களின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயன்படக்கூடிய முக்கியமான நூலாக இது இருக்கும்.
- -5%
சங்கத் தமிழ்ச் சொற்கள் (பகுதி – 1 )
0Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது நம் தொல்காப்பியத்தின் முடிவு. எந்தச் சொல், என்ன பொருளில், எங்கெங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்று ஆராயும் ஒரு முயற்சி இது. அந்த அடிப்படையில் அகவுநர், அசுணம், ஆரியர், கங்கை, பிசிர், யாஅம் ஆகிய ஆறு சொற்களை எடுத்துக்கொண்டு, சொல்லாய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்
- -5%
அச்சும் பதிப்பும்
0Original price was: ₹570.00.₹541.00Current price is: ₹541.00.அச்சும், பதிப்பும் தொழில் அல்ல, படைப்பின் எழிலாக எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல். எதையும் அரைகுறையாய் படித்துவிட்டு, முக்கால் குறையாய் எழுதுபவரல்ல மா.. அவரது குறிப்புகள் எப்போதும் இலக்கண சுத்தமாக இருக்கும். அச்சுக்கலை இந்தியாவுக்குள் வந்த நாள் 6.9.1556 என்று சொல்லும் வகையில் சுத்தமாக இருக்கும். அந்த வகையில் சுத்தமான வரலாற்று நூல் இது.
- -10%
ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
0Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.இப்பூமிப்பந்தில் மனித சமூகம் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் நெருக்கடி, போர் போன்ற பல்வேறு காரணங்களால் அகதியாக்கப்பட்டு, புலம்பெயர்ந்த நிகழ்வுகள் காலங்காலமாய் வரலாற்றில் காணப்படுகின்றன. அந்தவகையில் நாம் வாழும் காலத்தில் ஈழத்தமிழர்கள் போரினால் அகதியாக்கப்பட்ட நிகழ்வு இன்று உலகளவில் பேசப்படும் சிக்கலாய் அமைந்துள்ளது.
வரலாறு எனும் கற்பனை
0₹225.00வரலாறு என்பது ஒரு வகை கற்பனை. கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பனையோடு தொடர்ந்து உரையாடி வருகின்றன. அந்த உரையாடலின்மூலம் தொடர்ந்து செழிப்புற்று வருகின்றன.
- -10%
வயிறு ஆரத் தாய்முலை உண்ணாக் குழவி…
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.சங்க இலக்கியக் கவிதைகளின் நயங்களையும், பொருளையும் இனிய, எளிய நடையில் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்தவர் சு.பொ.அகத்தியலிங்கம். இன்றைய புதிய தலைமுறை இளம் வாசகர்கள் படித்துச் சுவைக்க ஏற்ற 25 குறுங்கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறார். வயிறாரத் தாய் முலை உண்ணாத குழந்தையாய்த் தமிழ்ச் சமூகம் வாடிப் போய் விடக்கூடாது என்பதே இவரின் நோக்கம்.
நிறைமொழி
0₹100.00முதுமொழி,பழமொழி,பொன்மொழி,மறைமொழி என்று பல உண்டு. எனக்கென்ன வள்ளுவன் சொன்ன நிறைமொழி பிடித்துப் போனது.எனக்கு நிறைவெனப் பட்டதை உங்களுக்குப் பகிர்ந்திருக்கிறேன். இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது படித்தால் போதும்.
- -10%
- -10%
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
0Original price was: ₹510.00.₹459.00Current price is: ₹459.00.வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.
- -10%
ஓர் ஏர் உழவன்
0Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. இது முற்றிலும் ஒரு புதிய விசாரனை முறை, திராவிடவியல் ஆய்வில் இது ஒரு புதிய உச்சம் எனலாம்.
- -10%
முற்போக்கு எழுத்தின் தடங்கள்
0Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக மாற்றம் பெற்று மாபெரும் மக்களியக்கமாக வளர்ந்து பயணிக்கிறது…
- -10%
இசையும் தமிழும் இசைத் தமிழ் தாத்தாவும்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.இசைத்தமிழ் என்று வருகின்ற போது தமிழிசையின் மும்மூர்த்திகளாக சொல்லப்பட்டிருக்கின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை. ஆகியோரை முன்னிருத்துவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
சிலப்பதிகாரத்தை இசைமொழியில் தமிழுலகிற்கு மறு அறிமுகம் செய்து, தமிழுக்கு என்று தனியாக இசை மரபு இருக்கிறது. என்கிற பேருண்மையை நமக்கு கண்டுணர்ந்து, அதை நிரூபித்தும் காட்டிய முதல் ஆய்வாளரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அந்த வரிசையில் வருவதே இல்லை. ஆகவே தான் இசைத்தமிழின் தாத்தாவாக நாம் ஆபிரகாம் பண்டிதரை முன்னிருத்த வேண்டியுள்ளது. இந்த நூலின் நோக்கமும் இது தான். ஆபிரகாம் பண்டிதர் குறித்து பேசுவதற்கு முன்பாக இசைத்தமிழ் வரலாற்றிற்குள் கொஞ்சம் பயணிப்பதும், அதன் வழியாக ஆபிரகாம் பண்டிதர் எனும் பெரும் இசைத்தமிழ் ஆய்வாளரின்
பிரம்மாண்ட சித்திரத்தை காண்பதும் தான் சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறோம். - -10%
போருக்கும் அப்பால்
0Original price was: ₹210.00.₹190.00Current price is: ₹190.00.இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது.
- -10%
சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை
0Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.தமிழ்ச் சமூகம் தம் பெருமையைப் பேசி ஓய்ந்திருந்த காலம். அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழி தெரியாமல் முடக்கம் நேர்ந்திருந்த சமயம். அரசியல் ரீதியாகப் பின்னிழுக்கும் பழமைவாதச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை.
அல் கொஸாமா
0₹320.00சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் ‘பதூவன்’ எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் நவீனத்துவ தத்துவம், ஆதி மனித வேட்கை, பாலைவனம்,’ஜின்’ எனும் மாய வலை, இயற்கை என்று பல எல்லைகளைக் கொண்ட ஒரு எல்லையற்ற புனைவு.
பீலர்களின் பாரதம்
0₹270.00“பீலர்களின் பாரதம்” என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது.
- -10%
தமிழ்ச்சங்கம் மெய்யா? புனைவா?
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்று பல அறிஞர்களும் கூறி வந்த, கூறிவரும் வேளையில் ஒரு சிலர் மட்டில் தமிழ்ச் சங்கங்கள் நிலவியிருந்தன என்பதே புனைந்துரைக்கப்பட்ட பொய்யுரை என்று இன்றூம் கூறுகின்றனர்.
- -10%
சொல்லேர்
0Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.சொல்லேர்(Sollare) எனும் அகராதியியல் ஆய்வு மேலும் ஒரு புதிய வெளிச்சத் தடத்தை உருவாக்கியிருக்கிறது– அண்டனூர் சுரா
- -10%
தமிழர் ஆடற்கலை
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.அனாதி காலந்தொட்டு தமிழர்களின் கலை, பண்பாட்டு வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக விளங்கும் ஆடற்கலையின் வரலாற்றை இலக்கிய கல்வெட்டுச் சான்றுகளோடு எடுத்துக்கூறி நிறுவும் நூல்.
- -10%
- -10%
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
0Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.(Thamizhaga varalaril oorum cheriyum)தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- -10%
கொஞ்சம் சரியா English…
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் நம்மில் பலருக்கு நமது ஆங்கில பயன்பாடு குறித்து கொஞ்சம் சந்தேகம், தயக்கம் இருக்கத்தான் செய்கிறது அல்லவா… அதை தவிர்க்கவே இப்புத்தகம்.