- -10%
கல்வி சிந்தனைகள்
0Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.இலங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான அவஹாம்பிள்ளை யோன் பெனடிக்ற் ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்வித் துறையிலும் தனித்துவமான தடம் பதித்தவர். அவரின் பல்கலைக்கழக முதுமானிப் பட்டத்திற்கான ஆய்வாக வழங்கிய ‘லெனின் கல்விச் சிந்தனைகள்’ என்கிற படைப்பின் நூல் வடிவம் இது.
- -10%
சூப்பர் சுட்டீஸ்
0Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம் ) விருது பெற்றவர். தமிழன் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆக்கியவற்றில் முதுகலை பட்டமும் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும் அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது.
- -10%
உஷ் குழந்தைங்க பேசுறாங்க
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.“நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால் நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்.
- Sale!
மீசைக்காரப் பூனை
0₹50.00கிளிகளும் குருவிகளும் தக்காளியும் பூனையும் சேவலும் நாயும் மாம்பழமும் காக்காயும் சிறார் உலகில் சகஜமாக நடமாடுவதை ஓசை நயத்துடனும் எளிய கவித்துவமான சொற்களுடனும் பாவண்ணன் பாடலாக எழுதியிருக்கிறார். “காக்கா கூட்டமே காக்கா கூட்டமே கிட்ட வராதீங்க காய வச்ச நெல்லு மேலே வாய வைக்காதீங்க’ என்று சிறுவன் காகங்களை விரட்டும் பாடல் வரிகள் சித்திரமாக விரிகிறது. அதேநேரம் கா கா என்பது காக்கையின் வணக்கம் என்று தனது புதிய கவித்துவமான வரிகளை அவர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். ரயிலில் தான் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை எழுதிய ஆசிரியர் சிறார்களின் மனஉலகை வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு காட்சிகளின் வழியாக, வெவ்வேறு பாத்திரங்களின் வழியாக அழகுறச்சொல்கிறார். அன்றாட வாழ்வியலில் அவர்கள் சந்திக்கும் பொருட்களைக் கொண்டு பாடல்களை இயற்றியிருப்பது இதன் சிறப்பு. தக்காளிப்பாடல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. “கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு கால் முளைத்ததாம் கூடத்திலிருந்து வாசலுக்கு துள்ளிக் குதித்ததாம்’ என்ற வரிகள் சிறார்களை மட்டுமல்லாது புத்தகம் வாசிக்கும் அனைவரையும் மலர்ச்சி கொள்ளச் செய்யும். பாவண்ணன் சமகால நவீன இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளி. பல விருதுகள் பெற்றுள்ளார். இது இவருடைய குழந்தைகளுக்கான புதிய பாடல் புத்தகம்.
- Sale!
தயா
0₹60.00குழந்தைகளுக்குத் தேவையான ஆர்வமுட்டும் கதையாடல்,திருப்புமுனைகள்,புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள்,அன்பு,நேசம்,விசுவாசம்,குரோதம்,பேராசை,ஏமாற்றம்,அறியாமை,விரோதம்,அறிவுகூர்மை,வெற்றி என்று எல்லா குணாதிசயங்களையும் சித்தரிக்கிற காதபாத்திரங்கள் உலவும் கதை தயா.குழந்தைகளின் புனைவுத் திறனை,நல்லுணர்வுகளை தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கதை தயா.
- Sale!
அழகிய பூனை/ MILLIONS OF CAT
0₹55.00பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி.அலுப்பான வாழ்வின் ஒருநாளில்,தன் கணவரிடம் அந்தப் பாட்டி,’நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்’என்கிறார்.இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா,கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா,பிடித்தார் எனில் எத்தனை பூனை…இன்னும் இன்னும் விரியும் வினாக்களுக்கு இந்த அழகிய பூனையைப் படியுங்கள்..அடடா என்ன ஒரு சுவாரசியம்!!
- Sale!
குட்டித்தத்தா/ A Little Old Man
0₹30.00கடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந்தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித்தாத்த.ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது.ஆனாலும்,அங்கொரு அதிசயம் நிகழ்ந்தது.திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல.தோள்கொடுக்க சில நண்பர்களும்தான்
- Sale!
லட்சத்தீவின் ராக்கதைகள்
0₹35.00மாலத்தீவிற்கு அருகில் உஷீமீள சின்னஞ் சிறிய தீவுதான் லட்சத்தீவு.இயற்கை எழில் கொஞ்சும் இத்தீவில் வாழும் மனிதர்களிடம் அழகான கதைகளும் உலவி வருகின்றன.அதன் எழுத்து வடிவமே இந்நூல்.
- -10%
கப்பலில் போகும் கனவுப் பயணம்
0Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.பள்ளியை விட்டு ஓடுவது பள்ளி செல்லும் அனைவருக்கும் தோன்றும். புத்தகங்களுக்கு வெளியே பாடத்திட்டம் இல்லாத சூழல். தாயையும் தந்தையையும் இழந்து பள்ளியில் தவறாக நடந்து கொள்ளும் சிறுவன் தன் நண்பனுடன் பள்ளியை விட்டு தன் ஒரே குடும்பத்தில் சேருகிறான். பின்னர், உலகப் புகழ்பெற்ற ‘ரஸ்கின் பாண்ட்’ அவரது பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது.
- -10%
மம்போ
0Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.காட்டு வாழ்க்கை அறுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது.
- -10%
சோனியாவும் டிசம்பர் ராஜாவும்
0Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.தேர்ந்தெடுத்த உலக நாடோடிக் கதைகளின் செரிவான தொகுப்பு.முன் அறிந்திராத சம்பவங்களின் வியப்பில் மூலமும் அதிசயங்களின் மூலமும் சிறார்களிடத்தில் அன்பைக் பகிர்ந்து கொள்கிறது.
- -11%
கடல் கடந்த பல்லு
0Original price was: ₹75.00.₹67.00Current price is: ₹67.00.இயல்பான களனில் விந்தையான நிகழ்வுகளாக கடல் கடந்து செல்லும் மலையான சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு.
- -10%
கல்கா மெயிலில் நடத்த சம்பவம்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.“ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு!”
- Sale!
பூட்டிய பணப்பெட்டி
0₹60.00வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா.
- -10%
பம்பாய் கொள்ளையர்கள்
0Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.‘ஜடாயு’வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை.அப்பாவி’ஜடாயு’விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள்.கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெற போராடினார்.கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?என்பதைச் சொல்கிறது பம்பாய் கொள்ளையர்கள். “