- -5%
ஒரு வழிப்போக்கனின் பார்வை
0Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.Oru Vazhipokkanin Parvai – ஒரு வழிப்போக்கனின் பார்வை
இன்றைய சமூகம் நலம்பெற்று எழுச்சியுற “அறிவார்ந்த மருந்து அவசியம். கோளாறுகள் நீக்கப்பட்டால்தான் ஆரோக்கியம் உண்டாகும். பார்வை தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் பாதை தெளிவாகும்; மானுட வாழ்க்கை மேன்மை பெறும்.
சமூகச் சீர்கேடுகளுக்கு மருந்தாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் கவிஞர் தியாரூ வழங்கியிருக்கும் அறிவார்ந்த படைப்பு ‘ஒரு வழிப்போக்கனின் பார்வை’. எந்தக் கருத்தாயினும், அதை இலக்கியச் சுவையோடு எடுத்தியம்பும் ஆற்றல் கவிஞரின் தனித்துவம்.
- -7%
ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்
0Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00.Muthalaliyam Samooga Maattram (ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்) தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் முதலாளிய அரசும் ஆட்சி நிர்வாகமும், வன், மென் புலங்களில் ஏற்படுத்திய சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பற்றியும், அம்மாற்றங்களினூடாக தலித் சாதிகளும் ஏனைய தமிழ்ச்சமூக அமைப்புகளும் எவ்வாறு அவ்வப்புலங்களின் நிலைமைகளை ஒட்டி மேற்கிளம்ப முயன்றன என்பதைப் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- -6%
நரிப்பல்
0Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.Narrippal (நரிப்பல்) சராசரி மனித வாழ்வில் இருந்து விலகிப் போனவர்களின் காலடித்தடத்தையும் – பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம்பிடித்து காட்டுகிறது இந்த சிறுகதை தொகுப்பு.
- -5%
ஓர் இரவு
0Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.Ore Iravu – அறிஞர் அண்ணா எழுதிப் புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றான இது ‘ஓர் இரவில்’ நடந்த கதை என பாராட்டப்பெறும் சிறப்புடையதாகும். ஜமீன்தார் ஜெகவீரன், கருணாகர தேவர், சீமான் செட்டியார் போன்ற படாடோபம் மிக்க செல்வந்தர்களிடம் சிக்கிக் கொண்டு ஏழைமக்கள் எவ்வாறெல்லாம் அவதியுற்றனர் என்பதை அன்றைய பண்பாட்டுச் சீரழிவுத் தொடர்பான சம்பவங்கள் மூலம் மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார் அண்ணா. இவ்விரு வர்க்கத்தினருக்கும் தனித்தனி வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம், கல்வி ஆகியவற்றில் மிகப் பெரிய இடைவெளியிருந்ததை வெளிச்சப்படுத்துகிறது இந்நாடகம்.
- -5%
பெண்ணியம்: வரலாறும் போட்பாடுகளும்
0Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.Penniyam Varalarum Kotpadugalum பெண்ணியம்: வரலாறும் போட்பாடுகளும்
இன்னும் கதைகள், புராணங்கள், தொன்மங்கள் ஆகியவற்றையே அறிவாதாரங்களாகக் கொண்டு சாதி, மதச் சழக்குகளில் அருமை வாய்ந்த மானிடப் பிறப்பைப் பாழாக்கிக் கொண்டிருக்கிற கீழைத்தேயக் ‘கிழட்டுப்’ பண்பாடுகளுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குப் பெண்ணியம் பற்றிய கல்வியும், அறிவும், – புரிதலும் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்பதை மிக விரிவாக விளக்கிச் செல்கிறது இந்நூல்,கருத்துக்களை எளிதாய்ப் புரியவைக்கும் வகையிலான தமிழாக்கமாக
அமைந்துள்ள இந்நூல் பெண்ணியம் என்பது பெண்களுக்கான அறிவாக மட்டுமில்லை, அது ஆண், பெண் முதலான அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக இருக்கின்றது என்ற கருத்தை உரத்துச் சொல்கிறது.
மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை
0₹220.00Marx Engels Panmozhi Pulamai – மார்க்ஸ் எங்கெல்ஸ்: பன்மொழிப் புலமை
படிப்பையும் எழுத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு பிணி, மூப்பைப் பொருள்படுத்தாமல் எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பன்மொழிப் புலமை, பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலின் வகித்த தலைமைப் பாத்திரம், இராபர்ட் ட்ரெஸ்ஸெல், எமிலி ஜோலா ஆகியோரின் பாட்டாளிவர்க்க நாவல்கள், ஆஃப்ரோ-அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வினின் இனவெறி எதிர்ப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன
- -5%
ரகசியம் / Ragasiyam
0Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.ரகசியமாகச் செய்யவேண்டியவை, வேண்டாதவை என்பதாக ரகசியத்தின் தன்மைகளை விளக்கிச் சொல்வதோடு ரகசியத்தின் இருப்பு, அதன் அவசியம், பாதுகாப்பு, காலம் என்பனவற்றைப் பகுத்துச் சொல்லும் நூல். நேர்மையுடனும் ஒளிவுமறைவில்லாமலும் நேர்கோட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு ரகசியம் அவசியமில்லை; எளிமையான வாழ்வு என்பது ஒளிந்து வாழத் தேவையற்ற சூழலைத் தரும்; அவர்கள் எந்தச் செய்தியையும் கமுக்கமாக வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை எடுத்துரைக்கும் நூல்.
- -5%
அறியப்படாத மதுரை
0Original price was: ₹165.00.₹157.00Current price is: ₹157.00.தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிகமயமாதலும் நம் மண்ணையும் மரபையும் வனப்பையும் பாழ்படுத்திவிட்டன. மதுரையும் அதற்கு விலக்கல்ல. காலப்பெருவெளியில் உந்தித்தள்ளுகிற வாழ்க்கைச் சூழலில் மறைந்தவற்றையும் நாம் மறந்தவற்றையும் கண்முன் கொணரும் முயற்சியாக இந்நூலெங்கும் மதுரையின் காலச் சுவடுகள். சிதைவுற்ற பழமையின் சிதைவுறாத நினைவுப் பதியன்கள்.
- -5%
- -5%
கீழடியும் மதுரையும்
0Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும் தொல்லியல் கழகத்தின் துணைத்தலைவருமான நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் எழுதியவையும் வெவ்வேறு கருத்தரங்குகளில் வாசித்தவையுமாக 11 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கீழடி அகழாய்வு, திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள், பாண்டிய நாட்டுத் துறைமுகங்கள், சோழர் கல்வெட்டுகள், நடுகற்கள் வழி வரலாறு, இருக்கந்துறை எனும் புதிய துறைமுக நகரம். திட்டக்குடியில் சித்திரமேழி விண்ணகரம் உள்ளிட்ட தொல்லியல் தொடர்பான கட்டுரைகள் பயனுள்ள புதிய பல தகவல்களை இயம்புகின்றன.
- -5%
கேளுங்கள்! சொல்கிறேன்…
0Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.இது கைக்கடக்கமான நூல். விறுவிறுவெனப் படித்து, பக்கங்கள் தீர்ந்துபோனதும் திருச்சி சிவா அவர்களுடன் நேரில் பேசிய ஒரு நிறைவு கிடைத்துவிடுகிறது. அவரிடம் இன்னும் என்னென்னவோ கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு முக்கியமான தமிழ்நாட்டு அரசியல்வாதியின் சமூகம் சார்ந்த கருத்துகளை அறிய. கட்சி பேதமின்றி எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
- -5%
எதிர்பாராத திருப்பம்!
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.“எதிர்பாராத திருப்பம்” எனும் இந்நூல் நெருக்கடி காலத்தில் கழகமும் – கழகத் தோழர்களும் சந்தித்த சோதனைகளையும், வேதனைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து புரிந்து கொள்ளுகின்ற வகையில் எளிமையான நடையுடன் அமைந்துள்ளது. நெருக்கடி காலத்தில் மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டபோது. சிறையில் கழகத்தினர் பட்ட இன்னல்கள். சந்தித்த சோதனைகள், இடையூறுகள், கவலைகள் ஒவ்வொன்றையும் இந்நூலில் எடுத்துரைக்கின்ற விதம், நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கு, ‘மலரும் நினைவுகளாய் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
- -7%
தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும், (1736-1874)
0Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.இந்த நூல் ஆனந்தரங்கப் பிள்ளை, ரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை. வீராநாயக்கர் மற்றும் முத்து விஜயத் திருவேங்கடம் பிள்ளை, ஆகிய நால்வர் புதுச்சேரியில் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் பற்றி விரிவாக அலசுகிறது. இஞ்ஞாசி, சின்னப்பன், பரஞ்சிமுத்து, இராயநாயக்கன் மற்றும் குருபாதம் நாட்டையர் ஆகிய ஐந்து தரங்கம்பாடி உபதேசியார்களின் நாட்குறிப்புகள், திருநெல்வேலியில் உபதேசியார் சவரிராயப் பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி விவரிக்கிறது.
- -4%
சனாதனம் அறிவோம் (Sanatana Leaks)
0Original price was: ₹450.00.₹430.00Current price is: ₹430.00.சனாதனம் அறிவோம் என்பது ஒரு மெய்யியல் கோட்பாடு அல்ல. மாறாக ஒரு ஆஸ்திக இந்துவின் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் என்றும், இவ்விதிமுறைகள் பழமையான நூல்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் தொகுத்துள்ளார் ஆசிரியர்.
- -5%
தமிழகப் பண்பாடு
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.இந்நூல் ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச்சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்குகிறது. ஐந்திணை சமுதாயம், ஆரம்பகால நாட்டார் சமயமும் வைதீகமாதலும், சமயப்பூசல்கள், பக்தியியக்கம், இலக்கண இலக்கிய நூல்கள், சைவத்தின் எழுச்சி, கட்டிடம் ஓவியம் மற்றும் பிற கலை, பண்பாடு, சோழர்களின் நிர்வாகம் பற்றியெல்லாம் அறியப்படாத பல புதிய தகவல்களும் செய்திகளும் ஆய்வு விவரங்கள் அடிப்படையில் இந்நூலில் தொருக்கப்பட்டுள்ளன.
சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனியமய மாக்கமும் அதன் சமூகத் தாக்கமும்
0₹250.00‘தமிழ் மக்கள் வரலாறு’வரிசையில் வெளிவந்துள்ள நூல், இந்த நூல் தமிழகத்தில் கி.பி. 1565-இல்தொடங்கி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களைப் பற்றியும் அவற்றின் தாக்கம் பற்றியும் விவரிக்கிறது. சிப்பாய்களும் போர்களும் தலையாலங்கானத்துப் போரிலிருந்து, தமிழக வரலாற்றின் முக்கியமான போர்களைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரையிலேயே அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர். தவிர,தமிழ் இலக்கியங்கள் காட்டும் போர்களைப்
பற்றிக் குறிப்பிடுவதுடன், கல்வெட்டுச் சான்றுகளுடன் போர்க்களகாட்சிகளையும் யானைகள், குதிரைகள் பயன்பாடு பற்றியும் விவரிக்கிறார்.