- -10%
மார்க்சிய செவ்வியல் நூல் வாசிப்பு வழிகாட்டி
0சாதாரண உழைக்கும் மக்கள் மார்க்சீய செவ்வியல் நூல்களை தங்களால் படிக்க இயலும், அவ்வாறு படிப்பது தங்களுக்கு புது வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கையை ஊட்டும் வகையில் எழுதவே கட்டுரையாளர்கள் முயற்சித்துள்ளனர். இவை பரவலாக வாசிக்கப்படவேண்டும். – வெங்கடேஷ் ஆத்ரேயா
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
குழந்தைகளின் நூறு மொழிகள்
0‘இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே விரும்புகிறார்’ என்று வேடிக்கையாகச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. உண்மைதான்! விதிகளை உடைக்க நினைப்போர் ஒன்று சேர்ந்து புதுப்புது விதிகளை உருவாக்கிக் கொள்வதைக் காலம் பூராவும் பார்த்துவிட்டேன். ஆசிரியராகிய நான், பெரும்பாலும் விதிகளின் உலகத்திலேயே வாழ்ந்துவிட்டேன். “கல்லூரி முதல்வர் நூலகம் வந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல், உட்கார்ந்தபடி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது ஏன்? ‘என்பது பணியில் சேர்ந்த புதிதில் நான் வாங்கிய மெமோ! விதிகளுக்கு மாற்று இன்னொரு விதியல்ல – விதிகளுக்கு மாற்று உரையாடல் என எனக்கு உணர்த்தியது அறிவொளி. தகவல்கள் அல்ல – மனித உறவுகளே உரையாடலின் முதல் தேவை என்பதையும் அறிவொளி எனக்குப் புரிய வைத்தது. வகுப்பறை, அறிவொளி உரையாடல்கள் சில, ‘ஆளுக்கொரு கிணறு’ என்ற பெயரில் 2010இல் நூலாக வந்தது. இரண்டு பதிப்புகளுக்குப் பின், உரையாடலைத் தொடர்ந்து கொண்டுபோக அவகாசம் வாய்க்கவில்லை. இன்று – இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து பாரதி புத்தகாலயம் ‘குழந்தைகளின் நூறு மொழிகள்’ என்ற தலைப்பில் நூலைப் புதுப்பித்திருக்கிறது. உரையாடல் தொடர்கிறது… – ச.மாடசாமி.
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00. - -10%
இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன்
0அறிவியல் கண்காட்சிகள் குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவே ஆகும். அவர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானி ஐன்ஸ்டின் போல் ஐடியா அகிலனே….. இந்த படைப்பைக் கையில் எடுக்கும் ஒரு குழந்தை இன்னொரு எடிசனாவது உறுதி.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
ஸ்தாபனம் மக்களிடமிருந்து மக்களுக்கு
0ஏன் இதர கட்சிகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாடுகள் வேறுபடுகின்றன? கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமாக சமுதாயத்தை மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது. புரட்சி என்றால் வன்முறையல்ல; சமுகத்தில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சுரண்டப்படும் உழைக்கும் மக்கள், நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்திற்கு வர வேண்டும். இந்த அதிகார மாற்றத்தை நிகழ்த்த, அதற்கேற்ற அமைப்புக் கோட்பாடுகள் கொண்ட புரட்சிகர கட்சியால்தான் இயலும். அந்த ஸ்தாபன கோட்பாடுகளோடு செயல்படும் கட்சியால்தான் மக்களை புரட்சி இலட்சியப் பாதையில் கொண்டு வர முடியும்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
Singaravelu First Communist in South India
0‘Singaravelar’ …Thus called reverently and affectionately by Tamils of many political leanings congress, Dravidian & Communist movements… M.Singaravelu (1860 – 1946), a colossal influence on the social political and cultural history of Tamils is a pioneer path finder and has many ‘firsts’ against his name. . The first Communist of South India. . The chairman of the first All India conference of Communist Party of India. . The Spirit behind the First May day celebration in India. His life and works is being brought to light by two of his comrades K.Murugesan and C.S.Subramaniam who were part of the communist movement from its earliest days.
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00. - -50%
பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல்
0மனிதர்களை வேட்டையாட தயங்காத சங்பரிவாரங்கள் கால்நடை எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூப்பாடு போடுகின்றன. இந்தியாவில் உள்நாட்டு இனமாடுகள் அழிவதற்கு இந்த பசுவதை தடைச்சட்டம் காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் 3 நிறுவனங்கள் இந்து மதத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினருக்கு சொந்தமானது. பசு வதை தடை சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தியே வலுவான முறையில் வாதாடுகிறார். மகாத்மாவை கொன்றவர்கள் பசு பாதுகாப்பு என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். பசுவை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை கொலை செய்கின்றனர். பயன்தரும் மாட்டை எந்த விவசாயியும் இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பமாட்டான்
₹50.00Original price was: ₹50.00.₹25.00Current price is: ₹25.00. - -10%
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12
0பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது. இந்நூலடுக்கு, மாமேதை லெனின் அவர்களின் அறிவுறுத்தலின்படி புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் டேவிட் ரியாஸ்னோவ் அவர்கள் தலைமையிலான குழு பல்லாண்டுகள் பணியாற்றிப் பதிப்பித்த 50 புத்தக அடுக்காக பல்லாயிரம் பக்கங்களாக விரியும் நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் என லெனின் அவர்களாலேயே வரையறுக்கப்பட்ட மார்க்சிய தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும் மார்க்சும், எங்கல்சும் எழுதிய அடிப்படைக் கருத்துகளைக் கற்க தேவையானதும், போதுமானதுமான தொகுப்பு.
₹3,000.00Original price was: ₹3,000.00.₹2,700.00Current price is: ₹2,700.00. - -10%
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
0இந்த பூமியில் பேராற்றல் மிக்கவன் ஒருவன் இருக்கிறான். அவனது கைகள் வாகனங்களை இலகுவாக இயக்கும். கால்கள் ஒரே நாளில் பல்லாயிரம் மைல்களைக் கடக்கும். அவனது இறக்கைகள் மேகங்களுக்கு மேலே உயரத் தூக்கிச் செல்லும். எந்த ஒரு மீனைக் காட்டிலும் அவனது துடுப்புகள் வலிமை பெற்றவை. அவனால் மலைகளைக் குடைந்து செல்ல முடியும். நடுவானிலேயே அவனால் அருவியைத் தடுத்து நிறுத்த முடியும். அவன் பூமியின் தோற்றத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறான், காடுகளை உண்டாக்குகிறான், கடல்களை இணைக்கிறான், பாலைவனங்களுக்கு நீரைக் கொண்டு வருகிறான். யார் அந்த வல்லமை மிக்கவன்? அவன் எங்ஙனம் வல்லமை மிக்கவனானான்? இதுதான் இந்நூலின் கதை.
₹440.00Original price was: ₹440.00.₹396.00Current price is: ₹396.00. - -10%
- -10%
மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு
0எட்டு மணிநேர வேலை கோரி சிகாகோ நகர வீதிகளில் செங்கொடி ஏந்திப் போராடிய தினமான மே 1 வரலாற்றின் பக்கங்களில் தொழிலாளர் தினமாகப் பதிவாயிற்று. இதன் பின்னணியில் சிகாகோ நகரத்து முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், ஹேமார்கேட் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றும்யாலும் போர்க்குணத்தாலும், அதை எதிர்கொண்டவிதம், போலீஸின் ஈவு இரக்கமற்ற அடக்குமுறை, தொழிலாளர்களின் உயிரிழப்பு, கண்ணீர் என வரலாற்றின் நெடிய பக்கங்களில் நீண்டு செல்கிறது. எம்.கே. பாந்தே அவர்களின் முன்னுரையுடன் வில்லியம் அடல்மன் எழுதிய இச்சரிதத்தை அதன் உயிர்த்துடிப்பு சற்றும் குறைந்து விடாமல் சு. சுப்பாராவ் தமிழில் தந்திருக்கிறார். உழைக்கும் வர்க்கமும் வாசகர்களும் வரவேற்று வாசிக்கவேண்டியப் பிரதி.
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00. - -10%
ஓநாய் கண்டறிந்த உண்மை
0நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி கோ’ என்ற ஆடல், பாடல் காட்சி என கொ.மா.கோ. இளங்கோவின் பேனா கற்பனைச் சிறகடித்து பறக்கிறது. கதைகளைப் படிக்கும் சிறார் கற்பனை வளம் சிறப்பதோடு வாசிப்பு ஓர் இன்பம் என்பதையும் உணர்வர்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - Sale!
தேர்தல் சீர்திருத்தம் ஏன்?
0₹5.00ஜனநாயகம் என்றால், பெரும்பான்மையோரின் ஆட்சி என்பது பொருள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை அமைந்த எந்த ஆட்சிக்கும் 50 சதவீத வாக்குகளை விடவும் அதிக வாக்குகள் கிடைத்ததே இல்லை. இன்றைய பாரதிய ஜனதா ஆட்சி பெற்றது 31 சதவிகித வாக்குகள் மட்டுமே! பணபலம், ஆள்பலம், சாதி – மதரீதியான அம்சங்களே இன்றைய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஊடகங்களின் மூலம், கார்ப்பரேட்டுகளே தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள். இந்தச் சீரழிவுகளுக்கு மாற்று – பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி முறை என்கிற மாற்று வழியை முன் வைக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. ஏன்?.
- -10%
உணவு மழைத் தீவு
0நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர், அகிலா, நிகிலா, ரவி ஆகியோர். தாத்தா சொல்லும் கதையில் வரும் தீவுதான் உணவு மழை பொழியும் தீவு அங்கு என்ன நடக்கின்றது. அதுதான் கதை. கதை கேட்ட அவர்கள் கனவில் அந்தத் தீவுக்கே சென்றனர். கதை படிக்கும் நீங்களும் செல்லலாம்.
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
சஞ்சீவி மாமா
1நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல் உண்மையிலிலேயே வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நெருக்கமானவராக சஞ்சீவி மாமாவை ஆக்கிவிடுகிறது. இதை வாசிக்கும் குழந்தைகள் சுகாதாரப் பணியாளர்கள் மீது பரிவும் நேசமும் கொள்வதோடு, இச்சாதியமைப்பின் மீது வெறுப்பும் கொள்வார்கள் என நான் நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை பிற சாதிக்காரர்கள் எழுதலாம். எழுதினால் இப்படி சுயசாதிப் பெருமிதங்களுக்கு எதிராக குற்ற மனம் கொள்ளும் விதமாக எழுத வேண்டும். ச.தமிழ்ச்செல்வன்
₹120.00Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00. - -10%
கொஞ்சம் துரோகம் செய்வோம்
0தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.ட்டீ. அன்பழகன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த சம்பவங்களை வெறும் சம்பவங்களாகப் பதிவு செய்யாமல் அவற்றின் சாரத்தை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்ட கட்டுரையின் தொகுப்பாக இந்நூல் வெளியாகிறது. இரா.முத்துசுந்தரம் அகில இந்திய தலைவர். AISGEF சமூகத்தில் நிலவிவரும் அவலங்களைக் கண்டும் காணாமல் இருப்பதை மிகுந்த கோபத்தோடு பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய புத்தகமாக உள்ளது. பெ.கிருஷ்ணசாமி மாநில துணைத் தலைவர், TNGEA
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -10%
நாட்டுக்குறள்
0இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் ஏட்டுச் சுவடியில் எழுதிய குறள், கைப்பேசி விசைப்பலகையில் நாட்டுப்பாடலாகி, இசை வடிவம் பெற்று, நாட்டுக்குறளாய் ஒலித்து, நவீன ஓவியமாகி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது ஏழே பாடல்களைக் கொண்ட குறும்படைப்பு, ஆனால், இதன் ஊடாக இருப்பதோ ஈரடிக்குறள் பற்றிய இரண்டாயிரம் ஆண்டுகாலப் புரிதல்கள். திருவள்ளுவரை மனிதம் பாடிய மாமனிதராய், ஒளிவு மறைவற்ற உயர்தனிக்கவிஞராய்க் கொண்டாடுவதே நாட்டுக்குறளின் நோக்கம். அதுவே அதன் உந்துவிசை.
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00. - -10%
வழிகூறும் மூளை
0மானுட நடத்தை அல்லது இயல்பு என்பது காலங்காலமாக ஒரு புதிராகவே இருந்துள்ளது. மானுட உள்ளம், இயல்பையும் நடத்தையையும் கொண்டு செலுத்துவது என்பது தெரிந்திருந்தாலும், தனது உள்ளம் என்பதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அந்நியோன்னியமானது உலகில் எதுவும் இல்லை என்றாலும் அது குறித்து மானுடத்தின் காத்திரமான ஞானம் குறைவே. அறிவியல் வராத அந்த தளத்தை தத்துவமும், கலை இலக்கியமும் இன்னும் அருளுரைகள், ஞான திருஷ்டிகள், கட்டுக்கதைகள் எல்லாம் ஆக்கிரமித்து கோலோச்சிக் கொண்டிருந்தன. புகை மண்டலமும், மஞ்சும், பனியுமாய் இவை மூடியிருந்த இந்த இருட் பரப்பை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து வளர்ந்து வரும் மூளை அறிவியல் புத்தொளி பாய்ச்சி துலங்கச் செய்து வருகின்றது. இந்த ஒளியைக் கொண்டு வந்த ஆளுமைகளில் முக்கியமானவர் விளையனூர். எஸ்.ராமச்சந்திரன். தனது பிரத்யேகமான மெல்லிய நகைச்சுவையோடு கூடிய கதையாடலில் அவர் ஆங்கிலத்தில் விளக்கியதை துல்லியமான தமிழில் தந்துதுள்ளார். பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி.
₹495.00Original price was: ₹495.00.₹445.00Current price is: ₹445.00. - Sale!
உயிர் தோன்றியது எப்படி?
0₹45.00எல்.கே.ஜி குழந்தை ஒன்றின் சந்தேகத்தைத் தீர்க்க ஓர் அப்பா எடுத்துக்கொள்ளும் முயற்சிதான் இந்த நூல். ‘உயிர் தோன்றியது எப்படி?’ என்ற கேள்வியிலிருந்து பிறக்கும் பல புதிய கேள்விகளுக்கு இந்த நூல் விடை தருகிறது. பூமியில் தோன்றிய முதல் உயிர் எது? கலிலியோவுக்குப் பிறகு உருவான அறிவியல் யுகத்தின் கண்டுபிடிப்புகள், டார்வினுக்கு முன்னால் உயிரினங்கள் பற்றி நிலவிவந்த நம்பிக்கைகள் என சுவாரசியமான பல அம்சங்களை இந்த நூல் விவரிக்கிறது.
- -10%
கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்
0இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -10%
இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை
0இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உப உற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் (க்ஷிணீssணீறீs) ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில் அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லது உடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ, பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ ஏற்பட முடியாமல் போனது.
₹70.00Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00. - -10%
புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு
0“மனிதர்களை சிரிக்க வைத்து பிழைத்துக் கொண்டுள்ள எனக்கும் கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?…” “நோய் என்பது மற்றவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு புற்றுநோயின் ஒரு பிரிவான லிம்போமா வந்திருக்கிறது…” “பெரிய நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்வதுடன் நோயை வெல்வதற்கான முயற்சிகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். சிலருக்குத் தைரியும், சிலருக்குப் பிரார்த்தனை, மற்ற சிலருக்குத் தளராத நம்பிக்கை, எனக்கு பலமாக இருந்தது சிரிப்பு. என் வாழ்க்கையில் மற்ற பல சிரமமான கால கட்டங்களைப் போல் இப்பொழுதும் சிரிப்பைச் சேர்த்துப் பிடிக்க நான் தீர்மானித்தேன்…”
₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00. - -50%
ஜெ, சசி வகையறா வழக்கின் கடைசி டைரி
0இறுதி காலத்தில் ஜெ. யின் சொத்து விபரம் பார்ப்போம். 2006ல் 24 கோடி 7 லட்சம் 2011ல் 51 கோடி 40 லட்சம் 2015ல் 117கோடியே 13 இலட்சம். இது தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இப்போதும் ஜெ.யின் மேன்மையை தூக்கி நிறுத்த தமிழகத்தில் சில முயற்சிகள் நடக்கின்றன. ஒரு வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலா என்ற ஊழலின் பிருமாண்டம் முதல் அமைச்சராக வருவதை தடுத்திருக்கிறது. ஆனால் ஜெ.க்கு தெரியாமல் சசிகலா மட்டும் ஊழல் புரிந்தார் என்று வாதிடுவோரும் உள்ளனர். ஜெ, சசியை ஆயாவாக மட்டும் வைத்திருந்தாகவும், இது ஆயா செய்த ஊழல் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். “குற்றவாளியான 1வது நபர் ஜெ. தன் வீட்டில், மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை வீட்டில் தங்க அனுமதித்தது அன்பின் பற்றினாலோ மனிதாபிமானத்தால் உந்தப்பட்டோ அல்ல. சூழ்நிலைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது எதை எனில் 1வது குற்றவாளியால் ஈட்டபட்ட சொத்துக்களை மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து சதி செய்து கபளிகரம் செய்வதே ஆகும். ஜெ.யின் சொத்துக்களை காப்பதற்காக மற்ற மூன்று குற்றவாளிகளும் அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெரிவதாக” உச்சநீதிமன்றம் கூறுகிறது.
₹10.00Original price was: ₹10.00.₹5.00Current price is: ₹5.00. - -10%
வரலாறு என்னை விடுதலை செய்யும்
0Varalaru Ennai Viduthalai Seiyum
உலக அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியங்களின் தலைவனாய் செயல்படும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் நிலைபெற்று, அதன் அச்சுறுத்தல்களை துச்சமென தூக்கியெறிந்த சின்னஞ்சிறு கியூபாவின் வரலாற்றை மாற்றி எழுதியவர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. லத்தீன் அமெரிக்காவின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர். பல நூற்றாண்டுகால ஸ்பானிய, அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக, கொடுங்கோலன் பாடிஸ்டாவிற்கு எதிராக இளைஞர் படைத் தலைவராய் 1953இல் நீதிமன்றக் கூண்டில் நின்றபடி “வரலாறு என்னை விடுதலை செய்யும்!” என அவர் எழுப்பிய கலகக் குரல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இந்த எழுச்சியுரை இப்போது தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கான ஓர் அஞ்சலியாய் வெளிவருகிறது.
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00. - -10%
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
0‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது.
₹500.00Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00. - -10%
சொற்களைத் தேடும் இடையறாத பயணம்
0தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ராகமும் ஆங்கில பல்ப் (றிuறீஜீ) எழுத்தாளர் இர்விங் வாலஸும், கோனார் நோட்சும் இன்ன பிறவும் என சூரியனுக்கு கீழேயுள்ள பலவற்றைக் குறித்தும் வாசிப்பு இன்பம் தரும் எழுத்து.
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00. - -50%
செல்லுலாய்டின் மாபூமி
0தமுஎகசவின் திரை இயக்கத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லும் முன்னணிப் படைவீரர்களில் ஒருவரான எழுத்தாளர் களப்பிரன் தன் சக தோழர்களை படம் பார்க்க அழைக்க விடுத்த அறைகூவலாகவே இக்கட்டுரைகளை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்கிறது. அப்படத்தின் இயக்குநர் பற்றிய அறிமுகத்தைச் செய்கிறது. படத்தின் கதைச்சுருக்கத்தையும் படத்தின் முக்கிய காட்சிகள் பற்றிய அறிமுகத்தையும் செய்கிறது. அத்தோடு நில்லாமல், சமகால பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளுடன் அப்படத்தை இணைத்து ஒரு முடிப்புரையும் கொண்டு நிற்கிறது. ஆகவே ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்க சுவையாகவும் ஒரு திரைப்படத்தைப்போல விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.ச.தமிழ்ச்செல்வன்
₹150.00Original price was: ₹150.00.₹75.00Current price is: ₹75.00. - -50%
பெண்களும் சோஷலிஸமும்
0ஒரு தொழிலாளியும் மார்க்சிய புரட்சியாளருமான பேபல் 1863 ஆம் ஆண்டிலிருந்து ‘சோசலிசம் – கம்யூனிசம்’ ஆகியவற்றுக்கான ஜெர்மன் அமைப்பை நடத்தி வந்தார். ஆகஸ்ட் பேபல், வில்ஹம் லீப்னெக்ட் அவர்களோடு இணைந்து ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை 1869 ஆம் ஆண்டு நிறுவியவர். உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியும் லெனின் உள்ளிட்ட உலகப் புரட்சியாளர்கள் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கியதுமான அக்கட்சியின் வளர்ச்சியில் மகத்தான பங்கு வகித்தவர். ஃபிரஞ்சு-ஜெர்மன் போரை எதிர்த்த காரணத்தால், வில்ஹம் லீப்னெக்ட்டோடு பேபலும் 1872 ஆம் ஆண்டு தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். பெண்களும் சோசலிசமும் என்ற இந்த நூலோடு அவரது தன் வரலாற்று நூலாகிய ‘எனது வாழ்க்கை’ என்பதும் இறவாப் புகழ் பெற்றவை ஆகும்.
₹450.00Original price was: ₹450.00.₹225.00Current price is: ₹225.00. - -10%
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்
0சமீப காலமாக சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துவரும் பாலஸ்தீனத் திரைப்படங்களின் தரமும் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன. ஐ.நா. சபையினால் இன்னமும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாத நிலையில், “பாலஸ்தீனத்திரைப்படம்” என்கிற பெயர்தாங்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் அவர்களின் திரைப்படங்கள் நுழையமுடிகின்றது. வலிமிகுந்த அவர்களின் வரலாற்றினை, வாழ்க்கையினை திரைப்படங்களின் ஊடாக உலகமக்களாகிய நமக்குச் சொல்லிவருகிறார்கள். பாலஸ்தீனர்களின் சமகால வரலாற்றையும் துயரங்களையும் உலகிற்குச் சொல்லிவிடவேண்டும் என்று திரைப்படங்களை உருவாக்கிய காரணத்திற்காகவே, சில கலைஞர்கள் உயிரையும் இழந்திருக்கின்றனர். சில பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத் திரைப்படங்களை துணைக்கு வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நூல்தான் இது.
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
- Cinema
- Combo
- Education
- English
- Stock Clearance
- Uncategorized
- அரசியல் (Politics)
- அறிவியல் (Science)
- அறிவியல் புனைகதைகள் (Science Fiction)
- ஆய்வு (Research Study)
- ஆவணம் (Document)
- இதழ்கள் (Magazine)
- இலக்கியம் (Literature)
- இளையோர் நாவல்
- உணவு
- உளவியல் (Psychology)
- ஓவியம்
- கடிதம்
- கட்டுரை (Article)
- கட்டுரைத் தொகுப்பு
- கணிதம் (Maths)
- கதைகள்
- கலை / ஊடகம்
- கல்வி (Education)
- கல்விச் சிறுகதைகள் (Educational Short Stories)
- கவிதை (Poem)
- குழந்தை இலக்கியம் (Childrens Literature)
- குழந்தை வளர்ப்பு
- குழந்தை வளர்ப்பு (Parenting)
- குறுங்காவியம்
- கையேடு
- சட்டம் (Law)
- சமூகம் (Society)
- சிறப்பு விற்பனை
- சிறார் சித்திரக் கதைகள் (Children's Cartoons Stories)
- சிறுகதை (Short story)
- சிறுகதைகள் (Short Stories)
- சிறுவர் கதைகள் (Stories for children)
- சிறுவர் நாடகங்கள் (Children's plays)
- சிறுவர் நாவல் (Children's Novel)
- சிறுவர் பாடல்கள் (Childrens Songs)
- சினிமா (Cinema)
- சுய முன்னேற்றம்
- சூழலியல் (Environment)
- சொற்சித்திரங்கள்
- தத்துவம் (Philosophy)
- நாடகம்
- நாடகம் (Drama)
- நாடோடிக் கதைகள் (Nomadic Stories)
- நாவல் (Novel)
- நூலகம் (Library)
- நூல் திறனாய்வு
- நூல் வாசிப்பு
- நேர்காணல் (Interview)
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- புதினம்
- புனைவு கதைகள்
- பெண்ணியம்
- பொது
- பொருளாதாரம்
- மதுரை வெளியீடுகள்
- மருத்துவம்
- மனநலம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு (Translation)
- வரலாறு (History)
- வாழ்க்கை வரலாறு (Biography)
- வானியல்
- விடுகதைகள்
- விமர்சனம்