Description
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உருவாகியிருப்பது இது. இயற்கையின் இயல்போடு சிறார் மனதை இசையவைக்கிற முயற்சி. ஆமையுடன் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று காரணங்களை கதையாய் கூறி கரை சேர்க்கும் கலையாகியிருக்கிறது இந்தப் படைப்பு. சிறார் படைப்பாளியாக முகிழ்த்திருக்கும் பாலபாரதியின் வருகை முக்கியமானது.சிறார் இலக்கிய தளத்தில் அவரால் அரியன நிகழும் என்பதை நான் உறுதியுடன் அறிகிறேன். வருக பாலபாரதி! யூமா வாசுகி
Reviews
There are no reviews yet.