Description
“மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.”
Reviews
There are no reviews yet.