Description
“…‘கரோனா வதந்திகள்’ குறித்த முதல் கட்டுரையே நம் கைப்பிடித்து உட்கார வைத்துவிடுகிறது. அத்தனை அருமையான அறிவியல் அலசல். ‘கரோனா வைரஸ் என்றால் என்ன?’ எனும் அறிமுகத்தில் ஆரம்பித்து, அது பரவிய விதம், முகக்கவசம் உள்ளிட்ட கரோனா பாதுகாப்புகள், மருந்து உண்டா? தடுப்பது எப்படி? எனப் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் ரீதியில் எழுதி, கோவிட்-19 நோய் குறித்த அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தருகிறார். சிறு சிறு தலைப்புகளில் செய்திகளைத் தந்திருப்பது வேகமாகப் படிக்கத் தூண்டுகிறது…”
கு. கணேசன்,மருத்துவர் & எழுத்தாளர்
“…இன்றைய முக்கிய செய்திகள் என்பது போலக் கரோனா பெருந்தொற்று சமயத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் முகமாக இந்தக் கட்டுரைகள் இருந்தன. ஆழமான வாசிப்பு, அழுத்தமான, சிந்தனை நுணுக்கமான பார்வை, அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் கொண்டுள்ள இந்த நூல் கரோனா பெருந்தொற்று கால அறிவியல் செய்தி தொடர்பில் மிக முக்கிய பங்களிப்பு…”
த. வி. வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு
“…அறிவியல் பிடிமானத்தை அதிகரிக்கும் படைப்பு: நாவல் கரோனா வைரஸைப் போன்று மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினையை அறிவியல்பூர்வமாக அணுகுவதற்கும், நமது தாய்மொழி வழியாகவே அதைப் புரிந்துகொள்வதற்கும் இவருடைய கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன்…”
ஆதி வள்ளியப்பன், எழுத்தாளர் & இதழாளர்
“…இக்கட்டுரைகள் பெருந்தொற்றின் முழுபின்புலத்தையும் அறிவியல் நுண்சொற்களைக் கொண்டு நிரப்பாமல் ஒருவித சரளமான எளிமைத்தன்மையுடனும், தெளிவுடனும் இத்தொற்று குறித்த புரிதலை மேம்படுத்த உதவிகரமாக இருக்கின்றன…”
வெளி ரங்கராஜன்,எழுத்தாளர் & நாடக செயல்பாட்டாளர்
சு.பொ.அகத்தியலிங்கம் –
நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் குறித்து சரியாக இந்நூல் சரியாகப் பதிவு செய்கிறது . போலி அறிவியலாளர் இதையே அழுத்திச் சொல்லி ஆகவே எந்த நோயாயாயினும் அதை நம் உடம்பே சரி செய்துவிடும் .மருந்து தேவை இல்லை . தடுப்பூசி வேண்டவே வேண்டாம் என விவாதம் செய்கின்றனர் .
நாவல் கரோனா வைரஸுக்கு நாம் தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தால் எதிரணுவைக் கண்டறிந்து நம் நோய்தடுப்பாற்றல் மண்டலம் விரைந்து செயல்படும் ; இல்லையேல் எதிரணுவை கண்டுபிடிக்க தாமதமாகும் அது சாவுக்கு காரணமாகும் என்கிறார் நூலாசிரியர் .
இந்நூல் கரானாவின் அறிவியல் அடிப்படையைப் புரிய உதவும்.