Description
இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார்.இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக,வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள “வாசு” ஒரே நேரத்தில் தோழராகவும்,புரட்சியாளனாகவும்,நண்பனாகவும்,அந்நியனாகவும் இருந்துள்ளார்.இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை சுப்ரன்ஷு சௌத்ரி வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பெறப்பட்ட உண்மைக் கதைகள் மற்றும் தரவுகளின் மூலம் மாற்றியமைக்கிறார்.இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய மிகவும் விரிவான,பாகுபாடற்ற,நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது.
Reviews
There are no reviews yet.