Description
அன்புமிக்க அருள் இத்துடன் உங்கள் தொகுப்புக்காகச் சில பக்கங்கள்.அடைமழைக் காலத்தில் பிள்ளை பிறந்திருக்கும்.பழந்துணியும் போர்வையுமாகப் பேறுகாலக் களையுடன் அசதியுடன் பெற்றவள் தூங்கிருப்பாள்.தொட்டிலில் பிள்ளை காலுதைத்துக் கிடக்கும்.பார்க்க வருகிற யாராவது ஒரு மூத்த மனுசி தொட்டிலைக் குனிந்து பார்ப்பாள்.’நல்லா வெயில் வந்துட்டுதே’என்று ஜன்னல் கதவைத் திறந்து வைப்பாள்.”சூடு பட்டத்தான் பெத்துப் பிழைச்ச உடம்புக்கு கெதியாக இருக்கும்’என்று சொல்வாள்.நான் ஜன்னலைத் திறந்து விட்டேன்.வெயில் விழுந்து கொண்டிருக்கிறது. -வண்ணதாசன்.
Reviews
There are no reviews yet.