Description
அமர வாழ்வு பெற்ற வீரருள் மாவீரன் பக்த்சிங், காந்தியடிகள் தலைமையில் தேச விடுதலை இயக்கம் நாளும் பலம் பெற்று வருகையில், உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் பகத்சிங் போன்ற ‘அக்னிகுஞ்சு’களை தந்தது. நாட்டுப்பற்று என்ற பெயரால் குறுகிய தேசியவாதம் எனும் நச்சு பரவி வந்த நாட்களில் விஞ்ஞான பூர்வமான சோசலிசம் கம்யூனிசம் எனும் கருத்தாக்கங்களை முன்னெடுத்து சென்றவர் பக்த்சிங். கல்லூரி நாட்களிலேயே மார்கசிய மெய்ஞானத்தை உள்வாங்கிய போராளி பகத்சிங். ‘சமரசம்’ எனும் பொய்மையை முற்றாக நிராகரிக்கும் பக்குவத்தை அந்த இளமைப் பருவத்திலேயே அவர் பெற்றிருந்தார். இளம் புரட்சியாளர்களின் நாயகனாகப் போற்றப்படும் தெளிந்த சிந்தனையும் ஆறாத போர்க்குணமும் கொண்டவர். கம்யூனிசம் பெரு இலக்கியங்கள் கிடைக்கப் பெறாத அந்த நாள்களில் மார்கசியத்தை ஆய்ந்துணர்த்த அறிஞர் அவர். தம்முயிர் ஈந்தும் மக்களை காக்கும் நெஞ்சுருதி படைத்த சமதர்மிகளுக்கு என்றும் ஆதர்சமாக இருப்பது பக்த்சிங்கின் வாழ்க்கை. வீரச்செறிவுதான் கம்யூனிஸ்ட்களின் அடையாளம். அதற்கு சான்றாகத் திகழ்வது அவருடைய வாழ்க்கை.
Reviews
There are no reviews yet.