Description
அம்மக்களோடு பேசிப்பழகி கண்டு அந்தத் தேயிலைக்காட்டின் வாழ்வின் உதிரத்தையும் கண்ணீரையும் வியர்வையையும் பிழிந்து ஒரு நாவலாக வடித்துள்ளேன். அந்த உலகம் தனி. அவர்களது காயங்கள் ஆறாத இரணங்கள். வலிகள் பழகிப்போன இதயங்களில் இன்னும் பிரிந்து வந்த மண்ணின் வாசமும் இழந்து போன உரிமைகளின் ஏக்கமும் நிறைந்து ததும்புகின்றன.
உலுக்கினால் தங்கமும் வைரமும் உதிரும் என்ற ஆசைகள் கண்ணாடி பிம்பங்களாய் கைக்கு எட்டாமல் போக பேராசைக்காரர்களின் கட்டளைகளால் கட்டப்பட்ட பாவப்பட்ட சீவன்களின் பரிதாபக்கதை இது.
Reviews
There are no reviews yet.