Description
“மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர்.ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்-தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண¢டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்க்ளுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார்.டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம் திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “ டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை.மனித எண்ணத்திலே ஒரு புரட்சியை உண்டுபண்னி விட்டார்.அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்“ என்று பொருத்தமான வர¤களுடன் புத்தகம் முடிகிறது.குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண¢டிய புத்தகம். “
Reviews
There are no reviews yet.