Description
“இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார்.மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். ……..“கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு ஸ்தெப்பி வெளி நெடுகிலும் அதிர்ந்து ஒலித்தது.வெள்ளி நிற ராக்கெட்டு பனி அடர்களை உதறிப் போக்கி விட்டு,விருப்பம் இல்லாதது போல மெதுவாகச் செலுத்து மேடையை விட்டுக் கிளம்பியது.பூமிச் சிறையின் தளைகளை அறுப்பதற்கு ராக்கெட்டு இயந்திரங்களின் பல பத்து லட்சம் குதிரைத் திறன் கடுமையாக முயன்று பாடுபட்டதை ராக்கெட்டின் இடிமுழக்கத்தால் தரையோடு தரையாக நசுக்கப்பட்டிருந்த நாங்கள் அனேகமாக உடல்களால் உணர்ந்தோம்!……. “
Reviews
There are no reviews yet.