Description
ஒரு நாற்பதாண்டு காலம் வேளாண்மை செய்திருக்கிறேன். அதில் இலாபம் என்பதை விட நஷ்டந்தான் அதிகம் சந்தித்திருக்கிறேன். அதற்கான உடலுழைப்பு ஏராளம். அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீவு பூராகவும் அலைந்திருக்கிறேன். சந்தோஷமாக அந்த இடமாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். புதுப்புது ஊர்களையும் புது மனிதர்களையும் காண்பதில் அடங்காத ஆசை கொண்டிருக்கிறேன்.
வாசிப்பதை ஒரு தவமாகவே கொண்டிருக்கிறேன். இலௌகீக வாழ்தலுக்கான தேடலில் இலக்கியத்தை ஊழியமாகக் கொள்ள முடியவில்லை என்னளவில் அதுவொரு பொழுதுபோக்கு. எழுத்து என்பது ஒரு வரம் என்றால் வாசிப்பு தவம் என்று சொல்வேன்.
-எஸ்.எல்.எம். ஹனீபா
Reviews
There are no reviews yet.