Availability: In Stock
Authors: ,

Entering the Kingdom | சுவர்கத்தின் நுழைவாயில்

180.00

In stock

Entering the Kingdom – சுவர்கத்தின் நுழைவாயில்

அன்பின் ஆட்சி பிரதேசத்தில் வாழும் சுவர்கத்தின் குழந்தைகள் சுகபோக வசதிகளைப் பெற்று வாழ்வார்கள், உழைப்பில் கவனம் செலுத்த தேவையின்றி வாழ்வார்கள் என்று எண்ணக்கூடாது. உழைக்க வேண்டாம் என்னும் ஆசையும் சுகபோக வசதிகளைப் பெற்று வாழ வேண்டும் என்னும் ஆசையுமே சுவர்கத்திற்கான அந்தத் தேடல் துவங்கியவுடன் கைவிடப்பட வேண்டிய முதல் இரண்டு பாவங்கள் ஆகும். சுவர்கத்தின் குழந்தைகள் தங்கள் கடமைகள் எதுவோ அவற்றில் நிம்மதியாக ஈடுபடுகிறார்கள். இன்னும் சொன்னால் அவர்கள் தான் உண்மையிலேயே வாழ்கிறார்கள். ஏனென்றால் சுயநல வாழ்வைத் தொடரும் வருத்தங்களையும் கவலைகளையும் அச்சங்களையும் கொண்ட வாழ்வை உண்மையான வாழ்வு என்று சொல்ல முடியாது. தன்னை பற்றிய எண்ணங்கள் ஏதுமின்றி தங்களுடைய முழு திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளைக் கொண்டு தங்களது எல்லா கடமைகளிலும் கவனமாக ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய திறனும் ஆற்றலும் இதனால் மேலும் வலிமை ஆகின்றன. நன்மையின் ஆட்சியை மற்றவர்களது இதயங்களிலும் அவர்களை சுற்றி உள்ள உலகிலும் நிலை நாட்டுகிறார்கள். நன்னெறி போதனைகளைத் தங்கள் வாழ்வில் வாழ்ந்தே பிறருக்கு எடுத்துக்காட்டுகிறார்கள். அது தான் அவர்களுடைய பணி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Entering the Kingdom | சுவர்கத்தின் நுழைவாயில்”

Your email address will not be published. Required fields are marked *