Description
“பெடரல் இந்தியா,புதிய இந்திய அரசியல் சட்டத்தையும்,சமஸ்தான இந்தியா சுதேச மன்னர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்த பல்வேறு ராஜ்ஜியங்களையும் குறித்த வரலாறாகவும் எழுதப்பட்டதாகும்.வாஸ்கோடகாமா கடல்மார்க்கத்தில் காட்டிய வழியைத் தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியினர் வணிகத்திற்கென்று இந்தியாவுக்குள் நுழைந்து தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும்,இந்தியாவை ஆண்டுக் கொண்டு இருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து படவும் காலம் சரியாக இருந்தது.இதையே வாய்ப்பாகக் கொண்டு பலநூறு குறுநில மன்னர்கள் இந்தியாவைக் கூறுபோட்டு தனிராஜ்ஜியங்களை உருவாக்கிக் கொண்டனர்.இவர்களுக்கிடையில் ஒயாது சண்டைகள் நடந்தன.தங்களுடைய சகாயத்திற்கு இவர்கள் உள்ளே நுழைந்த மாற்றார்களைத்தான் நாடினர்.இதுவே சமஸ்தானங்களின் அடிமைத்தனத்திற்கு வழிகோலியது.”
Reviews
There are no reviews yet.