Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹200.00 Original price was: ₹200.00.₹150.00Current price is: ₹150.00.
Four New Science Books of Ayesha Era Natarasan – Hindu Tamil Recommend
14 people are viewing this product right now
நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுக நூல்கள்
மூத்த அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிவருகிறார். புதிய வாசகர்களை மனதில் கொண்டு அறிவியல் அறிமுக நூல்களை நிறைய எழுதியிருக்கிறார். அந்த வகையில் புதிதாக ‘ஏஐ… மயக்கமா, கலக்கமா?!’, ‘மிக மிகக் கடினமா… கோடிங்’, ‘ஜீபிஎஸ்…இல்லை என்றால் என்ன ஆகும்?’, ‘ட்ரோனில்… பறக்க முடியுமா பள்ளிக்கு?’ ஆகிய நூல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்களால் உலகை ஆள உதவும் கோடிங், இடங்களைக் கண்டறிய உதவும் ஜிபிஎஸ், ட்ரோன் ஆகிய அனைத்துமே இன்றைக்குத் தவிர்க்க முடியாத நவீனத் தொழில்நுட்பங்களாக உள்ளன.
செயற்கை நுண்ணறிவு பற்றி ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது, பரவலாகப் பேசப்படுகிறது. அதேநேரம் ட்ரோன், ஜிபிஎஸ், கோடிங் போன்றவையும் இன்றைக்குப் பெரும் தாக்கம் செலுத்திவருகின்றன. இவற்றைப் பற்றி இந்த நூல்கள் அறிமுகப்படுத்துகின்றன.
வீட்டிலிருந்தே வேலை, பல நாடுகளில் இருப்பவர்கள் ஒன்றிணைந்து இணையவழிக் கூட்டம், கல்வியை எளிமையாக்கும் ஸ்மார்ட் பலகைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது கோடிங் எனப்படும் நிரல் மொழிகளுக்கான கட்டளைகளை எழுதுதல். இந்த கோடிங் இந்தியாவிலும் இன்றைக்கு மிக முக்கிய வேலையாக மாறிவருவதை நூல் விளக்குகிறது.
பழைய காலத்தில் கடல் மாலுமிகள் திசைகாட்டியைப் (Compass) பயன்படுத்துவார்கள். இன்றைக்குத் திறன்பேசி வைத்திருக்கும் அனைவரும் புவி இடம்காட்டியை (GPS) வைத்திருக்கிறோம். விமானங்கள், கார்கள், பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் இன்றைக்குப் புவி இடங்காட்டியைப் பயன்படுத்துகின்றன. இதற்காகச் செயற்கைக்கோள்கள் புவியுடன் எப்படிப் பேசுகின்றன, ஒளியின் வேகத்தில் சமிக்ஞைகள் எப்படிப் பயணிக்கின்றன, எப்படிக் கணிதம், இயற்பியலை இணைத்துக்கொண்டு விண்வெளித் தொழில்நுட்பம் பயணிக்கிறது என்று இந்த நூல் விளக்குகிறது.
காணொளி எடுக்கும் ட்ரோன்களைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். அதேநேரம் ட்ரோன்கள் மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளுக்குச் செல்கின்றன, வானில் உருவங்களை உருவாக்கி ஆச்சரியப்படுத்துகின்றன. இன்றைக்கு ட்ரோன்கள் என்னென்னவோ செய்கின்றன. இப்படிக் கணக்கற்ற வகைகளில் அவை பயன்படுத்தப்படுகின்றன. படைப்பாற்றலும் கற்பனையும் ஒன்றுசேரும் அதிசயத் தொழில்நுட்பம் ட்ரோன் என்கிறார் ஆசிரியர்.
செயற்கை நுண்ணறிவு என்பது சிந்திக்கும் இயந்திரமா, அதைக் கண்டு மனிதர்கள் உண்மையிலேயே அஞ்ச வேண்டுமா, அறிவியல்பூர்வமாகச் செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற கேள்விகளுக்குச் சுருக்கமாக விடையளிக்கிறது மற்றொரு நூல். உங்களுக்கு அறிவியல் பிடிக்கும், அதேநேரம் நவீனத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வதில் ஆர்வமும் இருந்தால் இந்த நூல்களை வாசிக்க வேண்டும்.
ஏஐ… மயக்கமா, கலக்கமா?!
மிக மிகக் கடினமா… கோடிங்
ஜீபிஎஸ்….இல்லை என்றால் என்ன ஆகும்?
ட்ரோனில்… பறக்க முடியுமா பள்ளிக்கு?
4 நூல்கள்,
ஆயிஷா இரா.நடராசன்,
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,
தொடர்புக்கு: 044 24332924
நன்றி: இந்து தமிழ் நாளிதழ்
₹299.00 Original price was: ₹299.00.₹284.00Current price is: ₹284.00.
₹650.00 Original price was: ₹650.00.₹585.00Current price is: ₹585.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.