Availability: In Stock
Author:

காந்திஜியின் இறுதி200நாட்கள்

SKU: 10078

Original price was: ₹840.00.Current price is: ₹750.00.

In stock

மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம். வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து காந்தியின் மீது ஈர்ப்புகொண்ட இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலை இலக்கிய ஆய்வாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்.

Description

மகாத்மா எனப் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியின் வரலாற்றில் கடைசி200நாட்களின் நிகழ்வுகளை நாட்குறிப்பின் பக்கங்களில் பதிவு செய்தது போன்ற நூல். 1947 -ஜூலை15முதல்1948ஜனவரி30-ம் நாள் வரையிலான200நாட்களிலும் ஒரு வினாடியைக் கூடத் தவற விடாமல் தேர்ந்த ஓர் ஒளிப்பதிவாளர் சிறந்த ஒரு காமிராவைக் கொண்டு அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் படமாக்கிய பின் மற்றொரு திறன் மிகுந்த ஒரு படத் தொகுப்பாளர் நேர்த்தியாக எடிட்டிங் செய்து தொகுத்த மிகச்சிறந்த ஓர் ஆவணப்படம் போல் இந்நூல் காட்சித் தொகுப்பாக அமைந்திருக்கிறது.மகாத்மாவின் கடைசி நாட்களில்,மத நல்லிணக்கத்திற்காகப் போராடிய-நாட்டுப் பிரிவினையின்போது இந்து-முஸ்லிம் மதவெறியர்களுக்கு எதிராகத் தன் உயிரையே பணயம் வைத்த நாட்கள் இவை.எந்த அளவிற்குத் துயரமும்,வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த200நாட்கள் இருந்தன என்று இவ்வளவு விரிவாகவும்-தெளிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிற நூல்.சமீப நாட்களில் வேறெதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.

Additional information

Weight100 kg
Pages

896

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “காந்திஜியின் இறுதி200நாட்கள்”

Your email address will not be published. Required fields are marked *