Description
1935இல் மாவோவின் வாழ்க்கை பிரிக்க முடியாத அளவுக்குச் சீனப் புரட்சியோடு இரண்டறக் கலந்தது அவர் தனது வேலையோடு ஒன்றிப் போனார்:அவர் சிந்திப்பதும் செயல்படுவதும் புரட்சியாகவே இருந்தது;அவரை வரலாற்றிலிருந்து பிரித்தெடுப்பது என்பது வரலாற்றின் பரிமாணத்தை இழப்பதும்,மனிதனை வெறும் நிழலாக்குவதும் ஆகும்.புரட்சி அவரது மூளையாகவும் ஆற்றலாகவும் அவர் வாழ்வதற்குரிய காரணமாகவும் அது இருந்தது.மாவோவிடம் மட்டுமல்ல பிற புரட்சியாளர்களிடமும் இவ்வாறே இருந்ததை எட்கர் ஸ்நோ ஏற்கனெவே குறிப்பிட்டு எழுதியுள்ளார்;குழந்தைப் பருவ நினைவுகளை பற்றிப் பேசும் போது”நான்”என்று குறிப்பிடுவது புரட்சியின் உத்வேகத்தைப் பற்றிக் கொண்ட பிறகு”நாங்கள்”என்றாகிவிடும் மேலும் சொந்த வாழ்கை குறித்த சாதாரண எண்ணங்களுக்கும்,உணர்ச்சி மிகுதல்களும் பிற விவரங்களும் மங்கி,நிறமிழுந்து நினைவிலிருந்து அகன்று போய் விருப்பார்ந்த பொது லட்சியமே வாழ்க்கையாய் எல்லாமுமாய் ஆகிவிடும்”நாங்கள் புரட்சியையே எண்ணுகிறோம்,உண்ணுகிறோம் பருகுகிறோம் உறங்குகிறோம்.என்று அர்ப்பணிப்பு மிக்க ஒரு புரட்சியாளர் கூறினார்.”இதோ ஒரு உலக மாமேதை இவர் உலகை மாற்றுவார்.”பிறரைத் தனது தொலைநோக்கு எல்லைக்குள் கொண்டுவந்துவிடும் ஆற்றல் ஒரு தலைவராக அவரிடமிருந்த கவர்ச்சியின் பகுதியாக அமைந்தது.
Reviews
There are no reviews yet.