Description
யாரிந்த ஆங்கிலேயர்? அவர்களிடம் நாம் எப்படி அடிமையானோம் என்ற அவனது அறிவுத்தேடல் அன்று தொடங்குகிறது. புதுச்சேரியில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின் போது இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு பலியான ஒரு நெசவாளர் குடும்பத்தில் தப்பி பிழைத்தவள் முத்தம்மா என்ற சிறுமி. தன் பதின்பருவத்தில் வேலனின் தேடுதல் பயணத்தில் இணைகிறாள். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக விலை மதிப்பற்ற “ஹீரா பிஜ்லி” என்ற மின்னல் வைரத்தை கண்டுபிடிக்கும் ஆபத்தான முயற்சியில் இருவரும் இறங்குகின்றனர். திருநெல்வேலியில் இருந்து தில்லி வரை, சென்னையில் இருந்து பூனா வரை, கல்கத்தாவிலிருந்து பானிபட் வரை அவர்களின் பயணம் தொடர்கிறது. வேலூர் புரட்சியில் அவர்களின் லட்சியம் வெந்து தணிகிறது.
Reviews
There are no reviews yet.