Description
“ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது.இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.இந்த நூல், 1880–1905ஆண்டுகளில் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும்.பொருளாதார அடிப்படையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கைகளும் இந்தப் புரிதலுக்குத் துணை செய்வன.அதே சமயம்,தேசிய அளவில் ஒரு மாற்றுப் பொருளாதாரச் சிந்தனை தோன்றி வளர்ந்ததையும் இந்த நூல் விவரிக்கிறது.தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நவ்ரோஜி,ரானடே,கோகலே,திலகர்,சுப்பிரமணிய ஐயர் போன்றோரின் ஆழ்ந்த அறிவாற்றலும் அரசியல் சிந்தனைகளும் இந்த வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவின.”
Reviews
There are no reviews yet.