Description
இருபதாம் நூற்றாண்டில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மார்கசிய சக்திகள்,உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலேயே கூடுதல் கவனம் செலுத்தின.இதர சில முக்கியமான அம்சங்களில் போதுமான கவனம் செலுத்தத் தவறின. ‘புதிய சமுதாயத்தைப் படைப்பபதற்கான போராட்டத்தில்,நாம் பழைய சமுதாயத்தை மட்டும் மாற்றுவதில்லை,நாம் நம்மையே மாற்றிக் கொள்கிறோம்;மார்க்கஸ் குறிப்பிட்டது போல,அந்த புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கு தகுதியுள்ளவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொள்கிறோம்.இருபதாம் நூற்றாண்டு சோசலீச அனுபவங்கள் பலவற்றின் தோல்விக்கு பிரதான காரணங்கள் என்ன என்று ஆய்வுசெய்கிறார் லெபோவிச்.அதற்கு ஆதாரமாக,இது வரை தமிழ் வாசகர்கள் அறிந்திராத யூக்கோஸ்லாவிய சோசலீச அனுபவங்களையும்,வெனிசுலாவின் சமீபத்திய அன்பவங்களையும் விவரிக்கிறார். ‘மனிதர்களின் முழுமையான வளர்ச்சியே லட்சியம்;சோசலீசம் அதை அடைவதற்கான பாதை’என்கிறார் அவர்.மார்க்கஸ் கூறியபடி”மனிதர்கள் அனைவரின் நலனுக்கவே மனித ஆற்றல் அனைத்தின் வளர்ச்சி”என்பதுதான் உண்மையான லட்சியம்.
Reviews
There are no reviews yet.