Description
இறுதி காலத்தில் ஜெ. யின் சொத்து விபரம் பார்ப்போம். 2006ல் 24 கோடி 7 லட்சம் 2011ல் 51 கோடி 40 லட்சம் 2015ல் 117கோடியே 13 இலட்சம். இது தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இப்போதும் ஜெ.யின் மேன்மையை தூக்கி நிறுத்த தமிழகத்தில் சில முயற்சிகள் நடக்கின்றன. ஒரு வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலா என்ற ஊழலின் பிருமாண்டம் முதல் அமைச்சராக வருவதை தடுத்திருக்கிறது. ஆனால் ஜெ.க்கு தெரியாமல் சசிகலா மட்டும் ஊழல் புரிந்தார் என்று வாதிடுவோரும் உள்ளனர். ஜெ, சசியை ஆயாவாக மட்டும் வைத்திருந்தாகவும், இது ஆயா செய்த ஊழல் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். “குற்றவாளியான 1வது நபர் ஜெ. தன் வீட்டில், மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை வீட்டில் தங்க அனுமதித்தது அன்பின் பற்றினாலோ மனிதாபிமானத்தால் உந்தப்பட்டோ அல்ல. சூழ்நிலைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது எதை எனில் 1வது குற்றவாளியால் ஈட்டபட்ட சொத்துக்களை மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து சதி செய்து கபளிகரம் செய்வதே ஆகும். ஜெ.யின் சொத்துக்களை காப்பதற்காக மற்ற மூன்று குற்றவாளிகளும் அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெரிவதாக” உச்சநீதிமன்றம் கூறுகிறது.
Reviews
There are no reviews yet.