Description
கல்குதிரை 28 2017 ஆடி, ஆவணி, புரட்டாசி விதைப்புக் கால இதழ் தனிச் சுற்றுக்கு மட்டும் இருளில் கோடு கிழித்து மறைந்த ஒளியை கவனமாகப் பார்த்தேன். அண்டமா நதியின் நீரால் கழுவப்பட்ட கூழாங்கற்களில் ஒன்று எங்கோ தொலைவில் மறைந்தது. விண்ணில் தோன்றும் தடங்களுக்கு ஆயுள் குறைவென்பதால் (தொலைவுதான் காரணம்) நான் பார்த்த ஒளித்தடம் சடுதியில் மறைந்தது. தொலைவிலே தெரியும் ஒளியில் ஓர் அழைப்பு ஒளிந்திருக்கிறது. அதன் அழைப்பைக் கேட்கக் கூடாதென்று பலமுறை நெல்லியிடம் சொல்லியிருக்கிறேன். நட்சத்திரங்கள் விழுந்து கொண்டேயிருக்கும் அதன் கிணற்றுக் கண்களை மூடவே மூடாது. ஒளித்தடத்தின் மூலத்தைப் பார்க்கப் போனால் அங்கே ஒன்றுமே இருக்காது. (பிரமிடுகளை அளக்கும் தவளை சொன்னது) அச்சம் “எங்கிருக்கிறீர் தந்தையே? காடு வல்லியதாய், மிருகங்கள் உள்ளன இங்கே புதர்கள் ஆடுகின்றன. விஷநெருப்புடன் வெடிக்கின்றன ஆர்கிட்டுகள், வஞ்சகப் பிளவுகள் ஊர்கின்றன எம் பாதத்தடியில். “எங்கிருக்கிறீர் தந்தையே? இரவுக்கு முடிவில்லை. இப்போதிருந்து இருள் வதியப்போகிறது எப்போதைக்குமாய். பிரயாணிகளோ வீடிலிகள் அவர்கள் பசியால் மடியப்போகின்றனர், எம் ரொட்டியோ கசப்பாய் கல்லென கடியதாய். “கொடூர மிருகத்தின் சுடுமூச்சு இன்னும் இன்னும் அண்மிக்கிறது, அது ஏப்பமிடுகிறது தன் நாற்றத்தை. எங்கே சென்றுள்ளீர் தந்தையே? இச்சகதிக் காட்டிற்குள் தொலைந்த உம் பிள்ளைகள் மேல் ஏன் தயவு மறுக்கிறீர்?” – செஸ்லா மிலோஷ்
Reviews
There are no reviews yet.