Description
“மனிதக் கழிவை அகற்றுவதே மாண்புமிக்க பணி” என்று கருதினார் மகாத்மா.
“அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால் அப்பிறவியில் நான் தோட்டியாகப் பிறக்கவே விரும்புகிறேன்” என்று மகாத்மா கூறினார்.
ஆனால் இன்றைய எதார்த்தம் வேறாக உள்ளது. தீண்டாமையின் உச்சகட்டக் கொடிய வடிவமான மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிநிலை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிப்பது அவமானகரமான செயலாகவே பார்க்க வேண்டும்.
கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலையெல்லாம் தற்போது மாறி விழிப்புணர்வு மேலோங்கி நிற்கிறது. இல்லையென்றால் “டாய்லெட் ஏக் பிரேம்கதா” என்று ஒரு திரைப்படம் எடுக்கத் துணிவார்களா?
கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு எதிராக “மீள்” எனும் ஆவணப்படம் எடுக்க முனைவார்களா?
கழிப்பறையின் 4500 ஆண்டுகால வரலாற்றைத் தாங்கி நிற்கிறது டெல்லியில் உள்ள சுலாப் சர்வதேச கழிப்பறைகளின் அருங்காட்சியகம். (Sulab International Museum of Toilet).
Reviews
There are no reviews yet.