Description
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 – 2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும். பாரதியின் எழுத்துக்களைப் படித்த பிறகு தாய்நாட்டைப் பற்றிய என் சிந்தனை வலுவடைந்தது. தேசியம் என்பதற்கான முக்கியத்துவம் புரியலாயிற்று.
Reviews
There are no reviews yet.