கூப்புக்காடு (வால்பாறையின் கதை)

கூப்புக்காடு (வால்பாறையின் கதை)

Author: ஆரா
(2 customer reviews)

210.00

(சுமார் 4500 வருடங்களுக்கு முன்பு ) சீன சித்த மருத்துவர் ஒருவரின் வெந்நீர் கோப்பையில் விழுந்தத் தேயிலையிலிருந்து உலகின் முதல் தேநீர் உருவானதென்னவோ தற்செயலானது தான். ஆனால் அதற்குப் பிந்தைய இந்த நான்காயிரம் ஆண்டுகளிலோ உலகமாந்தர்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படுவதாக பரவியிருக்கும் இந்தத் தேநீரின் ஒவ்வொரு சொட்டும் திட்டமிட்ட உழைப்பறிவில் ஊறியே நம் கோப்பையில் வந்தடைகிறது.

In stock

SKU: 18382 Categories: , Tags: , , , , , , , , , Product ID: 44705

Description

இயற்கையில் விளைந்துவந்த தேயிலை ஒரு விற்பனைப்பண்டமாக ஆனபோது அந்தப் பண்டத்தை உற்பத்திச்செய்யும் உயிருள்ள பண்டங்களாக வாங்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மிடம் பேச வந்துள்ளது இந்த கூப்புக்காடு நாவல்.

Additional information

Pages

208

Paper Format

Paperback

Publication Year

2022

2 reviews for கூப்புக்காடு (வால்பாறையின் கதை)

  1. A.Aadhisakyan

    This book is a very interesting and engaging novel about the tea estates and people of these estates
    This book has all the emotions which is entangled with the life of the people ( working people) of the tea estates. There is another novel called red tea which speaks about the dark side of tea estates this book on the contrary speaks about all the aspect of tea estates and the working section of tea estates. The time period is almost the late 1980s to 1990s the correctness of the book need not to be verified as the author is from the working section of the tea estates present in valparai . You will get a wholistic understanding of the society and the working structure of tea estates

  2. Rajan

    திரு. ஆரா அவர்களின் கூப்புக்காடு முதல் பக்கம் முதல் பக்கத்துப் பக்கம் பட்டையைக் கிளப்புகிறது ஆராவின் அனுபவப்படைப்பு.

    தேயிலை என்றால் என்ன அதன் நிறம் என்ன எந்த நாட்டில் தேயிலை தோன்றியது, தாட்டை ( கோடியை) எவ்வாறு கட்டவேண்டும், அட்டை என்றால் என்ன அந்த உயிரினத்தின் இயல்பு என்ன சீன இளைஞர்கள் எவ்வாறு போதைக்கு அடிமையாயினர் என்ற வரலாற்றில் துவங்கி ஒவ்வொரு பக்கத்திலும் பல திருப்பங்களோடு தத்ரூபமாக விளக்கும் விதம் ஒரு திரைப்படம் பார்க்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் எழுத்தாளர் ஆராவை “எய்யா எங்கய்யா இத்தனை நாள் இருந்தீர்” என ஆரத்தழுவிக்கொள்ளலாம் அவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார்.‌

    கம்யூனிஸம், முதலாளித்துவம், சோசலீஸம் என தேயிலை எஸ்டேட் அரசியலோடு உலக நாடுகளின் அரசியலை கலந்து கட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது மார்க்ஸீம் கார்க்கியின் தாய் நாவலுக்குப் பின் கூப்புக்காடுதான் என்றால் அது மிகையாகாது…!

    ராஜன் செல்லையா

Add a review

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018