Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹200.00
சங்க இலக்கியப் பாடல்களில் நளினமும்,உணர்ச்சிப் பெருக்கும்,சொற்செட்டும் நிரம்பியவையாகிய குறுந்தொகைப் பாடல்களில் மனம் தோய்ந்தவரான கு.மா.பா.,அவற்றைக் கட்டுடைத்து ஒரு மாலையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.டாக்டர்.ச.வே.சுப்ரமணியம்,பாவலர் மணி காரைக்குடி ஆ.பழநி போன்றோர் தெரிவித்த கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு தம் வாழ்நாள் முயற்சிகளில் ஒன்றாக குறுந்தொகைப் பாடல்களை முன் பின்னாக மாற்றி ஒரு புதுக் கோவையாகத் தந்திருக்கிறார்.
6 people are viewing this product right now
சங்க இலக்கியப் பாடல்களில் நளினமும்,உணர்ச்சிப் பெருக்கும்,சொற்செட்டும் நிரம்பியவையாகிய குறுந்தொகைப் பாடல்களில் மனம் தோய்ந்தவரான கு.மா.பா.,அவற்றைக் கட்டுடைத்து ஒரு மாலையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.கதை வடிவான காவியங்கள் பழங்காலத்தில் இயற்றாமற் போனது மணமும் எழிலும் மிக்க மலர்கள் கிடைத்தும் மாலைகளாகத் தொடுத்து நல்காதது குறையேயாகும்…என்ற டாக்டர் மு.வ.வின் ஆதங்கத்தையும்,இதே போல் டாக்டர்.ச.வே.சுப்ரமணியம்,பாவலர் மணி காரைக்குடி ஆ.பழநி போன்றோர் தெரிவித்த கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு தம் வாழ்நாள் முயற்சிகளில் ஒன்றாக குறுந்தொகைப் பாடல்களை முன் பின்னாக மாற்றி ஒரு புதுக் கோவையாகத் தந்திருக்கிறார்.இறையனார் அகப்பொருள் நூலின் வழி நின்று-பழைய காலச் சூழல் சார்ந்து இருக்கும் கட்டமைப்பை நீக்கிப் புதிய கோணத்தில் குறுந்தொகைப் பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.இவ்வாறு செய்வதால்ÔÔசிறப்புமிகு பழைய மரபிற்குப் புத்துயிர்ப்பு அளிக்கப்படும்.தெளிவற்ற நிலையில் குழம்பிக் கிடக்கும் அமைப்பில் ஒரு முறைமை இடம்பெறும்.தெளிவு உண்டாகும்.காலத்தின் தேவைக்கேற்ப மூலநூலின் பயன்பாட்டையும் அமைப்பின் பொருத்தத்தையும் மிகுதிப்படுத்தலாம்..என்று டாக்டர் க.த.திருநாவுக்கரசு கூறுவது போன்று பன்முகப் பயன்பாடு கருதி இவ்வரிய முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்.புத்தகத்தின் அமைப்பு, Ôநூன்முகம் என்ற விரிவான அறிமுகப்பகுதி,பேரா.அருணன்,பாவலர் மணி.பழநி,முனைவர் யோகீசுவரன் ஆகியோர் அளித்துள்ள ஆழமான அணிந்துரைகள்,மூல நூலில் பாடல் எண்ணும்,இவர் மாற்றியமைத்துள்ள பாடல் எண்ணும்- 51வகையான பிற்சேர்க்கை அட்டவணை-இவை மிகப் புதியன;நூலாசிரியரின் கடும் உழைப்பிற்குச் சான்று பகர்வன. Ôஒன்றை நினைவூட்டும் மற்றொன்று என்கிற பகுதி ஆச்சரியமூட்டும் ஒன்று.ஒப்புநோக்கிச் சுவைப்பதையும்,கட்டுடைத்து மறுவாசிப்புச் செய்வதையும் இந்நூலில் ஒருசேர அனுபவிக்க முடிகிறது.அரிய முயற்சி.
| Weight | 100 kg |
|---|
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
₹450.00 Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.