மலராத அரும்புகள்

மலராத அரும்புகள்

10.00

வாசகர் நெஞ்சம் அதிரும்படியான பல புள்ளிவிவரங்களோடு குழந்தை உழைப்பாளிகளின் வாழ்வு பற்றியும் மாற்றத்துக்கான போராட்டத்தின் அவசியம் பற்றியும் பேசும் புத்தகம்.

In stock

SKU: 10036 Categories: ,
Product ID: 47

Description

” 9அல்லது10வயதுக் குழந்தைகள் காலை3அல்லது4மணிக்கு படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு இரவு10அல்லது11மணிவரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்கள் உடல் சுருங்கி முகம் வெளுத்து நினைக்கவே பயமாக இருக்குமளவுக்கு கற்களாக குழந்தைகள் ஆக்கப்படுகின்றனர்”. 150ஆண்டுகளுக்கு முன்னால் மூலதனம் நூலில் இங்கிலாந்து நாட்டில் நடப்பது பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய வரிகள் இவை.இவ்வரிகளை வாசிக்கும்போது ஏதோ தமிழ்நாட்டில் சிவகாசியைப் பற்றி எழுதியது போல இருக்கிறது.வாசகர் நெஞ்சம் அதிரும்படியான பல புள்ளிவிவரங்களோடு குழந்தை உழைப்பாளிகளின் வாழ்வு பற்றியும் மாற்றத்துக்கான போராட்டத்தின் அவசியம் பற்றியும் பேசும் புத்தகம்.தீப்பெட்டித் தொழில்,பட்டாசு,கண்ணாடித் தொழில்,மண்பாண்டம் மற்றும் கல்குவாரி,கொலுசுப் பட்டறை,தையல் வேலை,பாலியல் தொழில் என சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பல தொழில்களில் நம் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கல்வியும் விளையாட்டுமாகக் கழிய வேண்டிய பால்யம் இப்படிக் கழிகிறது. “தினசரி உலகில்10கோடி குழந்தைகள் தினமும் வெறும் வயிற்றுடன் மௌனமாகப் படுக்கைக்குச் செல்கிறார்கள்” என்னும் யூனிசெஃப்-பின் அறிக்கையில் உள்ள இந்த ஒரு வரி எந்த உலக மகா இலக்கியமும் ஏற்படுத்தாத மன உளைச்சலையும் வேதனையையும் குற்ற உணர்வையும் கண்ணீரையும் வாசகருக்குத் தருகிறது.இதுபோன்ற ஏராளமான தகவல்கள்.மட்டுமின்றி ராணுவத்துக்கு40லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் நம் உலகம் இந்த உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் சத்தான உணவை வழங்கிடத் தேவையான50300கோடிப் பணம் இல்லாமல் முகம் திருப்புகிறது.குழந்தைகள் மீது எந்த அக்கறையுமற்ற இந்த உலகம் மாற்றப்பட்டே தீரவேண்டும். “

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலராத அரும்புகள்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018