Description
பொதுவாக மத்திய தர வர்க்கத்து அன்றாட வாழ்வில் எங்கும் டென்சன் டென்சன் என்பதே பேச்சாக இருக்கும்.டென்சன்களுக்கான காரணங்களையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம்.டென்சன்களை தர வாரியாக வகைப்படுத்தும் புத்தகம் தனிநபரே சரி செய்து விடக்கூடிய மன அழுத்தங்களை யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும் என விளக்குகிறது.பொருளாதாரம்,வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளால் வரும் மன அழுத்தத்தை அப்பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் சமூக இயக்கங்களில் பங்கேற்பதன் மூலமும் குறைத்துவிட முடியும் என அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைக்கிறது.நாம் கைக்கொள்ளத்தக்க பலவிதமான மனப் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறது.எளிய தமிழில் நம் அன்றாட வாழ்வின் உதாரணங்களோடு பல இடங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் புத்தகமாக வந்துள்ளது.
Reviews
There are no reviews yet.