மண்ட்டோ படைப்புகள்

மண்ட்டோ படைப்புகள்

545.00

மண்டோ படைப்புகள் இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை…. ஆரம்பித்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார். மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல, குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஸீ அசோகமித்திரன் உடல்கள் கலாச்சார குறியீடுகளின் தாங்கிகளாக மாற்றப்படுவதை மண்ட்டோவால் சகிக்க முடியவில்லை…. உடல்கள் மீது வரையப்படும் அடையாளங்கள், வெற்றுடலே அடையாளங்களின் தாங்கிகளாக மாற்றப்படுவது என்பவற்றை அவர் எழுத்துக்கள் தொடர்ந்து கேலி செய்கின்றன. இந்த அடையாளங்கள் கழற்றியெறியப்பட்ட நிர்வாண உடல்களை அவர் பூசித்தார். ஸீ அ.மார்க்ஸ் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கால எழுத்தாளராக ஒரு சிமிழிக்குள் மண்ட்டோவை அடக்கப் பார்த்த நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் தோற்றன… ஸீ பிரபஞ்சன் மண்ட்டோ பற்றி எழுதும்போது புதுமைப்பித்தன் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. படைப்புத்தளத்தில் இருவேறு தளங்களில் இயங்கியவர்கள் என்றபோதும் மண்டோவின் சமூக அவலம் பற்றிய உணர்வும் அதிகார எதிர்ப்புணர்வும் புதுமைப்பித்தனிடம் இல்லை. நிறுவன அமைப்புகளுக்கான எதிர்ப்புணர்வும் நிறுவப்பட்ட கருத்துக்களை மறுதலிப்பதும் எழுத்திற்கான அர்ப்பணிப்பும் இருவரிடமும் இருந்தது. மண்ட்டோவிற்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடி, அந்நியமாதல் உணர்வு புதுமைப்பித்தனிடம் இல்லை. தமிழ்ச்சூழலில் அதற்கான வாய்ப்பில்லை. காரணம் சாதிய அடையாளம் ஆழமாக வேறூன்றியுள்ளதால் ‘தனிமனிதனை’ கண்டடைவதற்கு சாத்தியமில்லாத சூழலே உள்ளது. ஸீ ஜமாலன்

In stock

SKU: 17712 Category: Tags: , , , , , , , , , , , , Product ID: 1988

Description

Additional information

Weight 0.95 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மண்ட்டோ படைப்புகள்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018